• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அயோத்தியில் சச்சின், ரஜினி, அம்பானிக்கு மட்டுமே கிடைத்த கௌரவம்

சினிமா

இன்று அயோத்தியில் ராமன் கோயில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன் வரிசையில் அமர வைத்து கௌரவப்படுத்தினார். இருந்தாலும் அவர் ஆவேசத்தில் அங்குள்ள பணியாளரிடம் குடும்பத்திற்காகவும் அனுமதி கேட்டு இருக்கிறார். ராமன் கோயில் திறப்பு விழாவிற்கு ரஜினியுடன் அவரது குடும்பத்தினரும் அயோத்தி சென்றனர். ஆனால் அவர்களுக்கு முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கவில்லை என்பது இப்போது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையாக வெடிக்கிறது.
  
புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பால ராமன் கோயிலின் திறப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ராம்சரண் மற்றும் ஆலியா பட், தனுஷ், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் முன் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர்.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது மகன்கள் ஆகியோருக்கு பின் வரிசையில் தான் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் ரஜினி, விழா ஏற்பாட்டளர்களிடம் தன்னுடைய குடும்பத்தை முன் வரிசையில் உட்கார வைக்க அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் கடைசி நிமிடத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என ரஜினிக்கு மட்டுமே முன் வரிசையில் இருக்கை தரப்பட்டது.

ரஜினிக்கு கிடைத்த மரியாதை அவருடைய குடும்பத்திற்கு கிடைக்கல ஆனால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரஜினி அருகில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதோடு இருவரும் ஒருவருக்கொருவர் ஃபேன்ஸ் என்பதால் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டார்களாம். அதேபோல் முன் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினியை பார்த்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி இருவரும் சூப்பர் ஸ்டார் அருகே வந்து வணக்கம் தெரிவித்து வரவேற்கும் காட்சியும் வெளியானது.

நம்முடைய சூப்பர் ஸ்டாருக்கு தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் நல்லாவே செல்வாக்கு இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் கெத்து காட்டுகின்றனர். ஒரே குறை என்னவென்றால் சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த கௌரவத்தை அவரது குடும்பத்திற்கும் கொடுத்திருக்கலாமே என்பதுதான் பலருடைய ஆதங்கம். 
 

Leave a Reply