• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைனோசருக்குச் சிறகு முளைத்தது போல் தமிழ் வானளாவுகிறது

சினிமா

பழங்கனவொன்று
பழுத்திருக்கிறது

தமிழ் உலகமொழிகள்
பேசவேண்டும் என்ற
நீண்ட நெடிய கனவு அது

சென்னை சர்வதேசப்
புத்தகக் காட்சியில்
நூற்றுக்கணக்கான
தமிழ்ப் படைப்புகள்
உலகமொழிகளில் வெளிவர
ஒப்பந்தமிடப்பட்டுள்ளன 

எனது
கள்ளிக்காட்டு இதிகாசம்
கருவாச்சி காவியம்
மூன்றாம் உலகப் போர்
தண்ணீர் தேசம்
ஆகிய படைப்புகள்
8 மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட உள்ளன

ரஷ்யன், அரேபியன் 
பிரெஞ்சு, ஆர்மேனின், 
துருக்கி, ஸ்லோவேனியன்,
மராத்தி, வங்காளம்
ஆகிய மொழிகள்
தமிழ் பேசவிருக்கின்றன

நம் உலகக் கனவு
பலிக்கத் தொடங்கிவிட்டது

தமிழ்நாட்டு அரசுக்கு நன்றி

டைனோசருக்குச்
சிறகு முளைத்தது போல்
தமிழ் வானளாவுகிறது

-வைரமுத்து
https://twitter.com/Vairamuthu/status/1749626675061469603?t=nyF9D5mqQPrWs3YFLUxyxQ&s=19

 

Leave a Reply