• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தயாரிப்பாளர் திட்டியதால் வந்த ஹிட் பாடல்

சினிமா

3 நாள் முயற்சி... பாடல் எழுத திணறிய கண்ணதாசன்... தயாரிப்பாளர் திட்டியதால் வந்த ஹிட் பாடல்

கவியரசு கண்ணதாசன் இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறிய ஒரு சுச்சுவேஷனுக்கு பாடல் எழுத முடியாமல் திணறிய சம்பவமும் அரங்கிகேறியுள்ளது.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் திணறியதாகவும், கடைசியில் படத்தின் தயாரிப்பாளர் திட்டிய ஒரு வார்த்தையால் ஒரு ஹிட் பாடலை கொடுத்ததாகவும் நெல்லை ஜெயந்த் என்பவர் கூறிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனது கவிநயத்தின் மூலம் பல தத்துவ பாடல்களை கொடுத்துள்ளவர் கவியரசு கண்ணதாசன். 1949-ம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான கண்ணதாசன், தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ள கண்ணதாசன், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார்.

தனது தத்துவ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்ற கண்ணதாசன், கவியரசு என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். ஆனால் இப்படிப்பட்ட கவியரசு இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறிய ஒரு சுச்சுவேஷனுக்கு பாடல் எழுத முடியாமல் திணறிய சம்பவமும் அரங்கிகேறியுள்ளது. 1974-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது

இந்த படத்தில் அண்ணன் தங்கையை திட்டுகிறார் இதில் குடும்ப உறவுகளை மையப்படுத்திய பாட்டாக இல்லாமல் ஒரு முனிவர் பாடும் பாடலாக இருக்க வேண்டும் என்று கே.பாலச்சந்தர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி டியூன் தயார் செய்து வைத்துள்ளார். கே. பாலச்சந்தர் எம்.எஸ்.வி கண்ணதாசன் மூவரும் பாட்டு எழுதுவதற்காக அமர்கின்றனர். முதல் நாள் எதுவும் வரவில்லை.

அதனைத் தொடர்ந்து மூவரும் 2-வது நாள் அமர்கின்றனர். அப்போவும் எதுவும் வரவில்லை. இதனால் கோபமாக கண்ணதாசன் அண்ணன் தங்கையை திட்டுகிறான் இதற்கு மெலோடி டியூக் போட்டு வச்சிருக்க டியூன மாத்து என்று எம்.எஸ்.வியிடம் சொல்ல அவரோ அண்ணன் தங்கையை திட்டினால் அது பாசமான திட்டாகத்தான் இருக்கும் அதனால் டியூனை மாற்ற முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் 2-வது நாளும் பாட்டு எழுத முடியாத சூழல் வருகிறது.

அடுத்து 3-வது நாள் அமர்கின்றனர். ஆனால் அப்போதும் எதுவும் பாட்டு எழுத முடியாததால் எம்.எஸ்.வி கம்பெனி காரில் தனது வீட்டுக்கு புறப்பட்டு விட்டார். அவரை விட்டுவிட்டு வந்து அதே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு போக வேண்டும். அதனால் படத்தின் தயாரிப்பு அலுவலகத்தில் கண்ணதாசன் இருக்கிறார். அப்போது மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் கண்ணதாசன் தனக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு தயாரிப்பாளரிடம் சொல்கிறார். ஆனால் அவரோ 3 நாட்களாக ஒரு பாட்டு எழுத முடியவில்லை. இதெல்லாம் உனக்கு வாங்கி கொடுக்கனுமா? இந்த மழைக்கு நீ ஒதுங்க என் ஆபீஸ் இருக்குனு சந்தோஷப்பட்டுக்க என்று சொல்கிறார். இதனால் கோபமான கண்ணதாசன் உன் ஆபீஸ் இல்லை என்றால் எனக்கு வேறு இடமே இல்லை தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சொல்கிறார்.

எதேச்சையாக வந்த இந்த வார்த்தையும் எம்.எஸ்.வி போட்ட டியூனும் சரியாக இருந்ததால், வீட்டுக்கு போன எம்.எஸ்.வியை மீண்டும் ஆபீஸ்க்கு வர செல்லி பாடலை எழுத தொடங்குகிறார் கண்ணதாசன் அப்போது உருவான பாடல் தான் தெய்வம் தந்த வீடு வீதி இருக்க... படத்தின் தயாரிப்பாளர் கூறிய ஒற்றை வார்த்தையால் கண்ணதாசன் ஒரு ஹிட் பாடலை கொடுத்துள்ளார். இந்த பாடலில் இருந்து முழுதான 4 சரணங்களை எடுக்க என்னால் முடியவில்லை என்று கே.பாலச்சந்தர் கூறியதாக நெல்லை ஜெயந்த் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply