• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்பெல்லாம் நடிக்க போகும்போது திட்டமிட்டுவிட்டு போவேன்

சினிமா

"புதுப்பேட்டை" படத்தில்  ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டா ஓரமா நின்று ஒட்டுமொத்த படத்திலயே ஒன்றிரண்டு வசனங்கள் மட்டும் பேசிய ஒரு நடிகன், அதே தனுஷ் கண் முன்னாடி டெல்லி ராஷ்டிரபதி பவன் மேடையேறி குடியரசுத்தலைவரிடம் தேசிய விருது பெற்ற விஜய் குருநாத சேதுபதி என்னும் இயற்பெயர் கொண்ட விஜய்சேதுபதி கூறியவை பற்றி பார்ப்போம்.

முன்பெல்லாம் நடிக்க போகும்போது திட்டமிட்டுவிட்டு போவேன். எந்த காட்சியை எப்படி பண்ணணும், எவ்வளவு நேரம் பண்ணலாம், உணர்ச்சிகரமான காட்சிகளில் எப்படியெல்லாம் நடிக்கலாம் என்றெல்லாம் திட்டமிடுவேன். இப்போது அதெல்லாம் போய்விட்டது. ஷூட்டிங் போய்ட்டு, அந்தக் காட்சிக்கு அங்கு என்ன தோணுதோ, அப்படியே பண்ணிடுவேன். முன்பு ஃபார்முலா மாதிரி ஒன்று இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. கூடுமானவரை இயல்பா இந்த காட்சியை எப்படி பண்ண முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

நிறைய பேர் என்னிடம் ஒரே மாதிரி நடிக்கிறீர்கள் என்ற  கேள்வி கேட்பது ரொம்ப சந்தோஷப்படுத்துது. ஏனென்றால், இந்தக் கேள்வியை என்னிடம் மட்டுமே திரும்ப திரும்பக் கேட்கிறார்கள். அவர்களுக்கு மற்றவர்களிடம் கேட்கணும் என்றே தோன்றவில்லை. இதுவே எனக்கு பெருமைதான். அதேபோல், விமர்சனத்தை ஒரு கருத்து என்ற அளவில் மட்டுமே பார்க்கிறேன். சுட்டிக்காட்டப்படும் தப்புகளை கருத்தில் கொள்வேன். தவறு எங்கே என்று யோசித்து  பார்த்து, அதை சரிசெய்ய முற்படுவேன். விமர்சனம் செய்வது சம்பந்தப்பட்டவர்களின் சுதந்திரம்.

இப்போ வந்திருக்கும் அளவில் நான் வளர பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. எந்த நேரமும் சினிமா பற்றியேதான் யோசித்துக் கொண்டிருப்பேன். அதே போல் நான் பார்த்த வேலைகளும் கொஞ்சமல்ல. டெலிஃபோன் பூத்தில் கொஞ்ச காலம், ஜவுளிக்கடையில் சில ஆண்டுகள், அப்புறம் சிமெண்ட் ஏஜென்சி, பாஸ்ட்ஃபுட் கடை என பல்வேறு வேலைகள் பார்த்தாலும் என்றைக்கும் மனம் தளர்ந்து போனது இல்லை.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply