• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உரசலில் தொடங்கிய எம்.ஜி.ஆர்- எம்.எஸ்.வி உறவு

சினிமா

'இவனுக்கு ஒரு சுக்கும் தெரியாதுன்னு திட்டினார்': உரசலில் தொடங்கிய எம்.ஜி.ஆர்- எம்.எஸ்.வி உறவு

1952-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான பணம் என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமாகினர்.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி நடிப்பில் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தனது இசையின் மூலம் கொடி கட்டி பறந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1952-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான பணம் என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இசையமைப்பாளர்கள் அறிமுகமாகினர். ஆனால் அதற்கு முன்பே எம்.எஸ்.விஸ்வநாதன் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போதைய கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், கோவையில் 3 வருடங்கள் லீஸ் எடுத்து வேலை பார்த்த ஒரு நிறுவனத்தின் படங்களுக்கு இசையமைப்பாளராக வேலை செய்து கொண்டிருந்துள்ளார். இதில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது பெயர் வெளியில் தெரியாது. ஆனால் தனது சொந்த ஆர்வத்தின் பேரில் இசையமைத்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 3 வருடங்கள் லீஸ் முடிந்து அந்நிறுவனம் மீண்டும் சென்னைக்கு கிளம்பும்போது 3 விஸ்வநாதன் உள்ளிட்ட சிலருக்கு 3 மாத சம்பளம் கொடுத்து எல்லாம் செட்டில் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த எம்.எஸ்.வி அடுத்து கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் மூட்டை தான் தூக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அப்போது அவரை பார்த்த, சுப்புராம் நாயுடு (அந்நிறுவனத்தின் இசையமைப்பாளர்) அவரை அழைத்து சென்று அந்த இசை நிறுவனத்தின் முதலாளியிடம் விட்டுள்ளார்.

இந்த பையனை பற்றி சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். என் பெயரில் பாடல் இன்று பிரபலமாகியுள்ளது என்றால் அது நான் போட்ட டியூன் இல்லை. இந்த பையன் போட்டது. இவனயும் சென்னைக்கு அழைத்துச்சென்று சி.ஆர் சுப்புராமிடம் விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட முதலாளி இவனா அந்த டியூன் போட்டுது இவனை தத்தி என்று நினைத்தேன் என்று சொல்லி ஆச்சரியமடைந்துள்ளார்.

அதன்பிறகு சென்னை வந்து மனோகரா சொர்க்க வாசல் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.விக்கு ஒரு கட்டத்தில் மலையாள தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்து மியூசிக் டைரக்டர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட எம்.எஸ்.வி இரவு பகலாக யோசித்து டியூன் போட்டு அடுத்த நாள் ரெக்கார்டிங்கு ரெடி ஆகியுள்ளார். அப்போது படத்தின் தயாரிப்பாளர் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து பாட்டு கேட்க வர சொல்லியுள்ளார். இதை கேட்டு யார் மியூசிக் என்று எம்.ஜி.ஆர் கேட்க, சி.ஆர் சுப்புராமிடம் இருந்த எம்.எஸ் விஸ்வநாதன் என்ற ஒரு பையன் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர் அய்யயோ அந்த பையன் அங்கு ஹார்மோனியத்தை துடைத்தக்கொண்டு இருந்தானே அவனுக்கு என்ன தெரியும், இப்படி புது இசையமைப்பாளரை போட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் வந்தாலும் வரவில்லை என்றாலும், கம்போசிங் நடக்கும் நீங்கள் இல்லை என்றால் வேறு ஒருவரை நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

இப்படி வேண்டா வெறுப்பாக எம்.எஸ்.வி பாட்டை கேட்ட எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போனது. அதன்பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனை தவறாக புரிந்து கொண்டதாக நினைத்த எம்.ஜி.ஆர் கொட்டும் மழையில் நனைந்தபடி எம்.எஸ். வி வீட்டுக்கு சென்று பாராட்டியதோடு இனிமேல் என் படங்கள் அனைத்திற்கும் நீதான் இசையமைக்க வேண்டும் என்று கூறியதாக எம்.எஸ்.வி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply