• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம்- ரஞ்சித்

சினிமா

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாகிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நேரலையை திருப்பூரில் இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது. கண்டிக்கத்தக்கது. இறக்குமதி செய்யப்பட்ட சாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதம் இந்து மதம். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது, 500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள். நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. ராமரின் விளையாட்டு துவங்கி உள்ளது. இந்த தேர்தலில் ராமர் பாடம் புகட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a Reply