• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு

இலங்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாக இருந்தது, இரண்டாவது காலாண்டில், அது 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 48.6 வீதமாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஏற்பட்ட கொரோனா தொற்றின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply