• Welcome to TamilsGuide
செய்திகள் 1

14 கோடி மைல் தூரத்தில் இருந்து லேசர் சிக்னல்! நாசா சொன்ன மகிழ்ச்சியான தகவல்

நாசா, விண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து லேசர் சிக்னலை வெற்றிகரமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

இது டி.எஸ்.ஓ.சி (Deep Space Optical Communication) என்ற புதிய தொழில்நுட்பத்தின் சாதனை ஆகும். சைக் விண்கலம்)

2023 ஆம் ஆண்டு அக்டோபரில், சைக் 16 என்ற சிறுகோளை ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.

செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே அமைந்துள்ள இந்த சிறுகோள் உலோகங்களால் ஆனது என்று கருதப்படுகிறது. சைக் விண்கலம் தனது இலக்கை விட 25 மடங்கு அதிக தரவுகளை பரிமாறி சாதனை படைத்துள்ளது.

சைக் விண்கலத்தில் டி.எஸ்.ஓ.சி என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இது விண்வெளியில் தொலைதூர தொடர்புகளுக்கு லேசர் ஒளியை பயன்படுத்துகிறது.

டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பத்தின் திறனை சோதிக்க, சைக் விண்கலம் பூமிக்கு லேசர் சிக்னலை அனுப்பியது.

14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த இந்த சிக்னல், பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரத்தை விட 1.5 மடங்கு அதிகம்.

இந்த சாதனை விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை திறக்கிறது. டி.எஸ்.ஓ.சி தொழில்நுட்பம், விண்வெளியில் இருந்து தகவல்களை விரைவாகவும், திறமையாகவும் பூமிக்கு அனுப்ப உதவும். 

Leave a Reply