• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7,00,00,000 செலவில் பல்செட் வைத்துக்கொண்ட பணக்கார பிரபலம்

அமெரிக்க ராப் பாடகரான கேன்யே வெஸ்ட், தனது பற்களை அகற்றிவிட்டு 7.07 கோடி செலவில் டைட்டானியம் பற்களை வைத்துக் கொண்டது பேசுபொருளாகியுள்ளது. 

பிரபல ராப் பாடகர் கேன்யே வெஸ்ட் (46), 2022ஆம் ஆண்டில் தன் மனைவியும் பிரபலமுமான கிம் கர்தாஷியனை பிரிந்தார். 

இந்த நிலையில் தனது புதிய ஆடம்பரமான பற்கள் மூலம் கேன்யே வெஸ்ட் (Kanye West) இணையத்தில் வைரலாகியுள்ளார். 

அதாவது, செயற்கையான டைட்டானிய பற்களை வைத்துக் கொண்டுள்ளார். இதற்கு அவர் செய்த செலவு 850,000 அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7.07 கோடி) ஆகும். இந்த மதிப்பானது வைரங்களை விட அதிகமாம். 

இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் followers-ஐ கொண்ட கேன்யே வெஸ்ட், தனது ஸ்டோரியில் புதிய பற்களை அமைத்துக் கொண்டதை வெளிப்படுத்தினார். 

அத்துடன் இவை நிரந்தரமான செயற்கைப் பற்கள் என்று கூறியுள்ளார். வைர பல் மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மருத்துவர் தாமஸ் கான்னெல்லி, பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் ஆன பற்களை கேன்யே வெஸ்டுக்கு பொறுத்தியுள்ளார்.

இந்த பல்செட்டுடன் கேன்யே வெஸ்ட் சௌகரியமாக இருப்பதாக அந்த மருத்துவர் கூறியுள்ளார். கேன்யே வெஸ்டின் சொத்து மதிப்பு 400 மில்லியன் டொலர்கள் (2023யின் படி) ஆகும்.    
 

Leave a Reply