• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி... தனது பாடல் வரிகளால் அழ வைத்த பட்டுக்கோட்டையார்

சினிமா

1955-ம் ஆண்டு வெளியான மகேஸ்வரி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்களை எழுதியிருந்தார்.

தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த இசையமைப்பாளரை தனது பாடல் வரிகள் மூலம் அழ வைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். அப்போது படித்த பெண் என்ற படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த படம் வெகுநாட்கள் கழித்து வெளியாகி ஒரு தோல்வி படமாக அமைந்துவிடுகிறது.

ஆனால் அதற்கு முன்பே 1955-ம் ஆண்டு வெளியான மகேஸ்வரி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்களை எழுதியிருந்தார். இந்த படமும் ஒரு தோல்விப்படமாகவே அமைந்துவிடுகிறது. பாடல் எழுதிய 2 படங்களும் தோல்வியடைந்ததால் பட்டுக்கோட்டையாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த தோல்வி படத்தில் பாடல் எழுதும்போது மாடர்ன் தியேட்டர் மேனேஜர் சுலைமான் என்பரின் பழக்கம் பட்டுக்கோட்டையாருக்கு கிடைக்கிறது.

அப்போது மாடர்ன் தியேட்டர் நிறுவனம் சார்பாக பாசவலை என்ற திரைப்படம் தாயாராகிறது. இதற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கிறார். இந்த படத்தின் நாயகன் எம்.கே.ராதா ஒரு மன்னர். மன்னனின் சகோதரன் ஒரு பெண் மீது ஆசைப்பட்டு தவறு செய்யும்போது மாட்டிக்கொள்கிறான். இதற்கு மக்கள் மன்னரிடம் நியாயம் கேட்க, மன்னர் தனது சகோதரனாக இருந்தாலும் தண்டிக்கிறேன் என்று சொல்லி சகோதரனை தேடுகிறார். ஆனால் அவர் தப்பித்து ஓடிவிட்டார்.

சகோதரனை தப்பிக்க வைத்ததே மன்னர் தான் என்று மக்கள் கோபமடைகின்றனர். இதை பார்த்து ஆத்திரமடையும் மன்னர், தனது பதவியை விட்டுவிட்டு வனவாசம் சென்றுவிடுகிறார். அப்போது அவரது குழந்தைகளுக்கு பசிக்கிறது என்பதால் அவர்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உணவு தேடி மன்னர் செல்கிறார். அப்போது அங்கு யானை உள்ளிட்ட விலங்குகள் வந்து விடுவதால் , மன்னரின் மனைவி மற்றும் குழந்தைகள் தப்பிக்க நினைத்து வேறு பாதையில் சென்று தொலைந்து விடுகின்றனர்.

மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலையும் மன்னனுக்கு தாகம் எழுப்பதால் ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கிறார். ஆனால் திருடர்கள் பயம் காரணமாக ஆடு புமேய்க்க வருபவர்கள் அனைவரும் குளத்தில் விஷத்தை கலந்து விடுகின்றனர். இந்த தண்ணீரை குடித்த மன்னர் மயங்கி விடுகிறார். ஆடு மேய்கிறவர்கள் இவரை காப்பாற்றினாலும் இவருக்கு சுயநினைவு இல்லாமல் பைத்தியமாக மாறிபவிடுகிறார். அப்போது ஓடிப்போன தம்பி திரும்பி வந்து மன்னனிடம் மன்னிப்பு கேட்டாலும் மன்னருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

அந்த இடத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்த பாடலுக்கு எம்.எஸ்.வி டியூன் போடுகிறார். ஆனால் உடுமலை நாராயணன், மருதகாசி, கண்ணதாசன் இவர்கள் அனைவரும் எழுதிய எந்த பாடலும் செட் ஆகவில்லை. இதை பார்த்த சுலைமான் உடனடியாக இது குறித்து பட்டுக்கோட்டையாருக்கு தகவல் கொடுக்கிறார். இதற்காக சென்னையில் இருக்கும் பட்டுக்கோட்டையார் நண்பர்கள் உதவியுடன் சேலம் வருகிறார். அதன்பிறகு சுலைமான் சுட்சிவேஷனை சொல்ல பட்டுக்கோட்டை பாடலை எழுதுகிறார்.

அதன்பிறகு எம்.எஸ்.வியிடம் செல்லும் சுலைமான் பட்டுக்கோட்டையார் குறித்து சொல்லி பாடல் எழுதியதை பற்றி சொல்கிறார். ஆனால் அனுபவ கவிஞர்களே திணறும் போது புது பையன் என்ன செய்வான் என்று சொல்லி மறுத்து விடுகிறார். அடுத்த நாள் கவிஞர்கள் அனைவரும் பாடல் எழுதுகின்றனர். எந்த பாடலும் எம்.எஸ்.விக்கு பிடிக்கவில்லை. மீண்டும் சுலைமான் பட்டுக்கோட்டை குறித்து சொல்ல எம்.எஸ்.வி. மீண்டும் மறுத்து விடுகிறார்.

3-வது நாள் எம்.எஸ்.வி விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அப்போது சுலைமான் மீண்டும் வந்து பட்டுக்கோட்டையின் பாடலை கொடுக்கிறார். அப்போவும் திட்டி அனுப்பும் எம்.எஸ்.வி சில நிமிடங்கள் கழித்து கொண்டுவா பாப்போம் என்று சொல்லி அந்த பாடல் வரிகளை படித்து பார்க்கிறார். அதை படித்து எம்.எஸ்.வி கண்ணீர் விடுகிறார். எந்த சுட்சிவேஷனுக்கு இவர் பாடல் எழுத முடியாமல் டியூன் வராமல் திணறினாரே அதற்கு இந்த பாட்டு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

அந்த பாடல் தான் உனக்கும் சொந்தம் எனக்கும் சொந்தம் உலகத்தற்கு எதுதான் சொந்தமடா என்ற பாடல். உடனடியாக இந்த பாட்டுக்கு டியூன் போட்ட எம்.எஸ்.வி ரெக்கார்டிங்கு அனுப்பி விட்டு இந்த பாடலை எழுதிய பையனை கூட்டிகிட்டு வா என்று சொல்கிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கு பிடித்து விடுகிறது. ஆனால் அடுத்த பாடலுக்கு டியூன் போடுவதற்கு முன்பு கடவுள் படத்திற்கு முன் அழுதுள்ளார்.

ஆண்டவா எனக்கு இவ்வளவு கர்வத்தை கொடுத்து விட்டாயே.. ஒரு கவிஞர் பாடலை என்ன என்று கூட பார்க்காமல் 3 நாட்கள் அவரை காக்க வைத்து விட்டேனே, ஏன் இந்த அளவுக்கு எனக்கு தலைக்கணத்தை கொடுத்தாய் என்று கேட்டு அழுதுள்ளார். அதன்பிறகு யார் வந்தாலும் அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நான் முதலில் பார்க்க போகிறேன் என்று கூறியுள்ளார் எம்.எஸ்.வி.
 

Leave a Reply