• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவசாயத்துறையை மேம்படுத்த வருகின்றது GoviLab

இலங்கை

முன்னணி சமூக நலன் பேண் சர்வோதய அமைப்பும், இலங்கையின் மாபெரும் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிறுவனமான Hatch இணைந்து, “GoviLab” எனப்படும் விவசாய தொழில்நுட்ப ஊக்குவிப்புத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளன.

இந்தியாவின் PwC இன் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம், பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் மையத்தின் ஆதரவுடன் இணைந்து முன்னெடுக்கும் தேசிய திட்டமான, இலங்கையின் உள்ளடக்கமான டிஜிட்டல் விவசாய மாற்றியமைப்பு மூலோபாயத்தின் (IDAT) உள்ளக அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  இலங்கையின் விவசாயத் துறையில் காணப்படும் பிரதான சவால்கள்  இனங்காணப்படுவதோடு,அதனூடாக உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவுகின்றது.
 

Leave a Reply