• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராஜஸ்தான்-ல் அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த நேரத்தில் 

சினிமா

ராஜஸ்தான்-ல் #அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவமாக இது கூறப்படுகிது. அந்த காலக்கட்டத்தில் சௌகரியங்கள் நிறைந்த கேரவன் வசதிகள் பெரிதாக இல்லை.

அப்போது பாலைவன மணலில் ஜெயலலிதாவை இழுத்து செல்வது போன்ற ஒரு காட்சி. அப்போது டூப் போட்டுக் கொள்ளலாம் என படப்பிடிப்பு குழுவில் பலர் கூறியும் அதை மறுத்து தானே நடிக்க தயாரானாராம் ஜெயலலிதா.

இது ஜெயலலிதாவிற்கு முதல் முறையல்ல. பலமுறை கடின காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் அறிவுரை கூறியும் கூட அதை கேட்காமல் பாலைவன மணலில் இழுத்து செல்லப்படும் அந்த காட்சியில் ஜெயலலிதா நடித்தாராம்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிற்கு ஏதாவது ஆனால், அது படத்தை தயாரிப்பு நிர்வாகம், இயக்குனர் குழு, படப்பிடிப்பு குழு என பலரை பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு அச்சத்தில் ஆழ்ந்தாராம்.

அந்த அக்னி வெயிலில் பெரிய மணல் மேட்டில் படம் காட்சிப்படுத்தப்படுகிறது. திடீரென பலத்த காற்றில் எல்லாம் தூக்கிவாரிப் போட ஜெயலலிதா காணாமல் போகிறார்.

படப்பிடிப்பு குழு அனைவரும் பதற்றத்தில் ஆழ, எம்ஜிஆர் உட்பட அனைவரும் ஜெவை தேடி ஓடுகின்றனர். அப்போது ஒரு மணல் மேட்டில் ஜெவின் சேலை தெரிய அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

யாருக்கும் அனுமதி இல்லை!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, எம்ஜிஆர் தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை. "உன் மேல் கொண்ட பாசத்தால் தானே அனைவரும் உன்னை காண வெளியே காத்திருக்கின்றனர்.." என எம்ஜிஆர் ஜெவிடம் கேட்கிறார்...

அதற்கு இரும்பு பெண்மணி ஜெயலலிதா, "நான் வலியோடு இருப்பதை யாரும் பார்க்க கூடாது. என்மேல் யாரும் பரிதாபம் கொள்ள கூடாது. நான் அழக்கூடாது, நான் அழுவதை யாரும் பார்க்க கூடாது.." என பதில் கூறினாராம் ஜெயலலிதா. எம்ஜிஆர் ஏதும் பேசாமல் நகர்ந்து விட்டார்.

பத்து நாட்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பு நடக்கிறது. தளத்திற்கு மலர்ந்த முகத்துடன் புன்னகையுடன் வந்து நடிக்க துவங்கினாராம் ஜெயலலிதா அதை கண்டு அங்கிருந்த படப்பிடிப்பு குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

Prashantha Kumar

Leave a Reply