• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் மண்ணிலும் மடுமாதா....

இலங்கை

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டதை தொடர்ந்து யாழ். மறைமாவட்டத்திற்கும் எடுத்துவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து மறைக்கோட்ட பங்குகள் ரீதியாக திருயாத்திரையாக கொண்டு செல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சிறப்பு நிகழ்வை முன்னெடுக்க யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆயர் தலைமையில் நடைபெற்ற குருக்கள் மன்றில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை சிறப்பான முறையில் முன்னெடுக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை யாழ். மறைமாவட்டத்தின் ஆறு  மறைக்கோட்டங்களிலும் உள்ள பங்குகளுக்கு யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை,  கிளிநொச்சி, முல்லைத்தீவு எனும் ஒழுங்கில் திருச்சொருபம் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு திருப்பலிகளும் பக்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply