• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வித்தியாசமான குரல் கொண்ட பாடகர்களையும் பாடகியரையும் ஒரு போதும் நாம் மறப்பதே இல்லை

சினிமா

வித்தியாசமான குரல் கொண்ட பாடகர்களையும் பாடகியரையும் ஒரு போதும் நாம் மறப்பதே இல்லை. அப்படியான பாடகியரை எண்பதுகளில் தேடித்தேடி அறிமுகப்படுத்தினார் இளையராஜா. பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் முதலானோருக்கு அடுத்த கட்டமாக பல பாடகியரை அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அவர்களின் குரல் வழியே வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மயிலிறகு. தேன் குழைத்த குரல்கள். அப்படியான தேன் குரலும் மயிலிறகு இதமும் கொண்ட குரலுமானவர்தான் எஸ்.பி.சைலஜா.
பாடும் நிலா பாலு அவர்களின் உடன்பிறந்த சகோதரியான எஸ்.பி.சைலஜா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.  
தமிழில் "அன்னக்கிளி" திரைப்படப் புகழ் ஆர்.செல்வராஜ் அவர்கள் இயக்கிய "பொண்ணு ஊருக்கு புதுசு" (1979) திரைப்படத்தில் "சோலைக்குயிலே காலைக்கதிரே" மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களுடன் "சாமக்கோழி...ஏய்...கூவுதம்மா" ஆகிய இரண்டு பாடல்களைப் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.  
இதற்கு முன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த "மனிதரில் இத்தனை நிறங்களா" திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஷியாம் அவர்களின் இசையில் அவரது சகோதரர் பாலு அவர்கள் பாடிய "மழை தரும் வெண்மேகம்" என்ற பாடலுக்கு ஹம்மிங் மட்டும் தந்திருந்தார் சைலஜா.  
இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்கள் தெலுங்கில் இயக்கிய "சாகர சங்கமம்" (1983) என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் குமாரி சைலஜா  கதாபாத்திரத்தில் டான்ஸராக நடித்திருந்தார்.  உலகநாயகன் கமல்ஹாசன், சரத்பாபு நடித்திருந்த இப்படம் தமிழில் "சலங்கை ஒலி" என்ற பெயரில் அதே ஆண்டில் வெளிவந்தது.  
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ரேகா, தேவயானி முதலானோருக்கு டப்பிங் குரலும் கொடுத்தவர்... இன்றைய தேதி வரைக்கும் தனிக்குரலரசியாகவே ஜொலிக்கிறார். அண்ணன் எஸ்.பி.பி.யுடன் இவர் பாடிய டூயட் பாடிய பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். ‘பூந்தளிர்’ படத்தில், ‘மனதில் என்ன நினைவுகளோ’ பாடலில் இவரின் குரலும் ‘லலலா’ என்று வருகிற ஹம்மிங்கும் நம்மைக் கொள்ளைகொள்ளும்!
44 ஆண்டுகளாகப் பாடிக்கொண்டிருக்கும் தனித்துவக் குரல் நாயகி
எஸ்.பி.சைலஜா அவர்கள் பாடிய எனக்கு பிடித்த சில பாடல்கள். 
"ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே" - கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் அகல் விளக்கு திரைப்படத்தில்.
"மலர்களில் ஆடும் இளமை புதுமையே" - கல்யாணராமன் திரைப்படத்தில்.
"ஆயிரம் மலர்களே மலருங்கள்" -  மலேசியா வாசுதேவன், ஜென்ஸி ஆகியோருடன் நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தில்.
"ஆடிடும் ஓடமாய் ஆனது காதலே" - தனது சகோதரர் பாடும் நிலா பாலு அவர்களுடன் "சுவரில்லாத சித்திரங்கள்" திரைப்படத்தில்.

"ஆசயைக் காத்துல தூதுவிட்டு" - ஜானி திரைப்படத்தில்.
"சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி" - கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடன் "மீண்டும் கோகிலா" திரைப்படத்தில்.
"ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" - தனிக்காட்டு ராஜா திரைப்படத்தில்.
"மலர்ந்திருச்சு பூங்கொடி 
மஞ்ச தெளிக்க வாங்கடி", 
"ஒரு கிளி உருகுது 
உரிமையில் பழகுது ஒமைனா மைனா" - எஸ்.ஜானகி அவர்களுடன் மற்றும் தனது சகோதரர் பாலு அவர்களுடன் "ஓ...வெண்ணிலாவே வா ஓடிவா"  "ஆனந்தக்கும்மி" திரைப்படத்தில். 
"என் புருஷன் தான் எனக்கு மட்டுந்தான்" - பி.எஸ்.சசிரேகா அவர்களுடன் "கோபுரங்கள் சாய்வதில்லை" திரைப்படத்தில் 
"தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் "சட்டம்" திரைப்படத்தில்.  
"கீதம் சங்கீதம் 
நீதானே என் காதல் வேதம்" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் "கொக்கரக்கோ" திரைப்படத்தில்.
"வரம் தந்த சாமிக்கு பதமான லாலி", "ராமன் கதை கேளுங்கள்" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் "சுவாதி முத்யம்" திரைப்படத்தில்.
"படிப்புல ஸீரோ நடிப்புல ஹீரோ", 
"ராகவனே ரமணா ரகுநாதா" - இசைப்பேரரசி பி.சுசீலா அவர்களுடன் "இளமை காலங்கள்" திரைப்படத்தில்.
"புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில்.
"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில்.
"வண்ணம் கொண்ட வெண்ணிலவே" (டூயட்) தனது சகோதரர் பாலு அவர்களுடன் அவரது இசையமைப்பில் சிகரம் திரைப்படத்தில். 
"வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் "மாநகரக் காவல்" திரைப்படத்தில்.
"ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே" - மலேசியா வாசுதேவன் அவர்களுடன் "மணிப்பூர் மாமியார்" திரைப்படத்தில்.
"கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன" - மலேசியா வாசுதேவன் அவர்களுடன் செந்தூரப்பூவே திரைப்படத்தில்.
"பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்" - மலேசியா வாசுதேவன் அவர்களுடன் எங்க ஊரு ராசாத்தி திரைப்படத்தில்.
"தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே" - மலேசியா வாசுதேவன் அவர்களுடன். 
"பனி விழும் பூ இரவில்" - தைப்பொங்கல் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன்.
"இளமை ரதமோ நிலவின் முகமோ" - மலேசியா வாசுதேவன் இசையில் அவருடன் பாடிய பாடல். "ஆயிரம் கைகள்" திரைப்படத்தில்.
"பாட்டு எங்கே" - பூவிழி வாசலிலே திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன்.
"கண்ணோடு கண்ணும் 
கையோடு கையும் ஒண்ணோடு ஒன்றாக வேண்டும்" - தனது சகோதரர் பாலு மற்றும் வாணி ஜெயராம் ஆகியோருடன் "கண்ணோடு கண்" திரைப்படத்தில். 
"கட்ட வண்டி கட்ட வண்டி" - சகலகலா வல்லவன் திரைப்படத்தில்.
"காக்கி சட்டை போட்ட மச்சான்" - மலேசியா வாசுதேவன் அவர்களுடன் சங்கர்குரு திரைப்படத்தில். 
"மலையருவி 
மணிக்குருவி" - அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில். 
"பூவே உன்னைக் கட்டிக்கொண்டு பூஜை செய்யட்டா" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் அவன் திரைப்படத்தில். 
"கண்ணுக்குள்ளே யாரோ" - இசைப்பேரரசி பி.சுசீலா அவர்களுடன் கை கொடுக்கும் கை திரைப்படத்தில். 
"வான்போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே" - தனது சகோதரர் பாலு அவர்களுடன் சலங்கை ஒலி திரைப்படத்தில்.
-- 
Prashantha Kumar
 

 

Leave a Reply