• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீச்சா

இலங்கை

இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) மிகவும் அழகானதும், தமிழ் மணம் , உணர்வு வீசுகின்ற அழகிய சோலையும் கூட, சிறுவர்களுக்கு பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம் தான் இந்த றீச்சா. 100 ஏக்கருக்கு மேல் இருக்கும் இந்த இடம், 300 இற்கு  மேற்பட்ட வேலையாட்கள் வேலை செய்கிறார்கள் போல. அவர்கள் உழைக்கும் பெரும்பகுதி பணத்தை அதுக்குள்ளையே செலவு செய்கிறார்கள் போல.

இலங்கையிலையே இப்படி ஒரு பிரமாண்டமான பொழுதுபோக்கு இடம் இல்லை என்று தான் சொல்ல முடியும், அங்கு சென்றால் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் தேவைப்படும் முழு இடமும் சுற்றி பார்த்து அனுபவிக்க முடியும். இன்னும் பல புதிய விடயங்களை நாளுக்கு நாள் செய்து வருகிறார்கள். நாங்கள் சென்ற நாள் புதிய ஒரு பொழுதுபோக்கு இடம் உருவாக்கிக்கொண்டிருந்தார்கள் எதிர்வரும் மார்ச் மாதம் அந்த இடமும் திறப்பார்களாம் (Lesher World இல் உள்ள மாதிரி சில விளையாட்டுகள்)

சுவையான உணவு, அன்பான அரவணைப்பு, கண்கவர் காட்சிகள், உலக அதிசயங்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தல், தமிழ் மன்னர்களின் பெயரில் அமைந்த வீதிகள், தமிழுக்கே சொந்தமான பூக்கள், ஐவகை நிலங்கள் யாவற்றையும் ஞாபகப்படுத்தும் முகமாக தங்குமிடமும் அறைகளின் பெயர்களும் இப்பெயர்களால் அமைந்தமை மிகவும் சிறப்புக்குரியதாகும். 

அந்த இடத்துக்கு செல்லும்பொழுது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நினைவுகள் தான் வரும். அருமையான இடம் யாழ்ப்பாணம் செல்லும் A9 வீதியில் இருந்து வெறும் 2 KM தூரம் தான் இருக்கும் ஆனால் வீதி தான் கொஞ்சம் மோசம், ஆனால் அந்த இடத்துக்கு சென்ற பின்னர் இந்த குறை கண்ணனுக்கு தெரியவில்லை

எதிர்காலத்தில் இந்த வீதியையும் ஒழுங்காக அமைத்தால் நன்றாக இருக்கும். யாழ்ப்பாணம் செல்பவர்கள் மறக்காமல் செல்ல வேண்டிய இடம் தான் இந்த ReeCha.

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Selvakumar Natkunasingam

Leave a Reply