• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தன்னை நம்பியவர்களுக்கு உதவுவதில் எம்.ஜி.ஆர்-க்கு நிகர் யாருமே இல்லை!!

சினிமா

எம்.ஜீ.ஆர்-க்கும்,நகைச்சுவை நடிகர் சந்திபாபுக்கும் இடையே குலேபகவாலி படத்தில் இருந்தே நெருங்கிய நட்பு உண்டு.
நடிகர் சந்திரபாபு ஒரு வெகுளியான வெள்ளந்தியான மனிதர் இருந்தாலும் முகத்திற்கு நேரே அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விமர்சித்து விடுவார்.
சந்திரபாபு மீது அளப்பறிய அன்பு கொண்டவர்  அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். 
அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியாது!!
கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப்போடு நடித்தவர் சந்திரபாபு. 

சந்திபாபுவை பொருத்தவரை அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யக்கூடியவர்.
எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.
எம்.ஜி.ஆரை பொருத்தவரை யார் மீது அதிக அன்பு இருக்கிறதோ அவர்களுக்கு ஒருபடம் நடித்து கொடுப்பார்.
அப்படி சந்திரபாபுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட படம் "மாடி வீட்டு ஏழை"
படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் எம்.ஜி.ஆர் போட்ட கண்டிசன் என்னவென்றால் "நான் கடுமையான வேலைப்பளுவில் இருக்கிறேன் கொஞ்சம் பொறுமையாக இருங்க நடித்து தருகிறேன்"என்பதாகும்.
சந்திரபாபுவின் அவசரத்தால் பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. 
அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு!
கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். 
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சந்திரபாபு எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியை சந்திக்க சென்றார்.
அவரிடம் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை மோசமானது.ஒரு கட்டத்தில் சக்கரபாணியை அடிக்க நாற்காலியை தூக்கிவிட்டார் சந்திரபாபு!அதோடு படமும் நின்று போனது.
அதன் பின் சந்திரபாபு கஷ்டத்தை பொறுக்காத எம்.ஜி.ஆர் ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.
எம்.ஜி.ஆர்-ன் சொந்தப்படமான நாடோடி மன்னனில் அவருக்கு ஒரு வசனம் எழுதி இருப்பார் கவியரசு கண்ணதாசன்!
 ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம்!!. நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை!!"
இந்த வரிகள் எம்.ஜி.ஆர்-க்கு எப்போதுமே பொருந்தும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 

 

Leave a Reply