• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனியை ஸ்தம்பிக்கவைத்துள்ள வேலை நிறுத்தம்

ஜேர்மனியில் வாழ்க்கைச் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணம், மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளும், போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்துள்ள விவசாயிகளும்.
  
ஜேர்மனியில் வாழ்க்கைச் சூழலில் பெரும் மாற்றம் ஜேர்மனியில் ரயில் சாரதிகள் புதன்கிழமை முதல், இன்று வெள்ளிக்கிழமை வரையிலான மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள். பெரும்பாலான ரயில்கள் ஓடாததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது பொது வேலைநிறுத்தம் போல் உள்ளது என்கிறார், ஆய்வமைப்பு ஒன்றைச் சேர்ந்த நிபுணரான கார்ஸ்டன் நிக்கல் (Carsten Nickel).

1906க்குப் பின் ஜேர்மனி ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கண்டதில்லை என்கிறார் அவர். இது ஜேர்மனிக்குப் புதிது என்று கூறும் அவர், இப்படி வேலைநிறுத்தமும், அரசியல் வன்முறையும் இதற்கு முன் இருந்ததில்லை என்கிறார் அவர்.

சமீபத்தில் பொருளாதாரத்துறை அமைச்சரான ராபர்ட் (Robert Habeck) தாக்கப்படுவதிலிருந்து சற்றே தப்பியதைத்தான் கார்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

சுமார் 300 விவசாயிகள் கூட்டமாகக் கூடி, அமைச்சர் பயணித்த படகிலிருந்து அவரை இறங்கவிடாமல் தடுத்துள்ளார்கள். அப்போது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மனியின் பல்வேறு நகரங்களில் ட்ராக்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அரசு, டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டுள்ளார்கள். உண்மையில், கொரோனா நிதியைக்கொண்டு பல்வேறு நிதியுதவிகளை செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், கொரோனா உதவி நிதியை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது என ஜேர்மன் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், வாக்களித்த சில விடயங்களை அரசால் நிறைவேற்றமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply