• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூன்று மனைவியர்

சினிமா

நாகம்மாள் என்கிற பெண்ணை நாகர்கோவிலில் முதலில் மணந்தார். , டி.ஏ.மதுரம் நடிகையாக வந்ததும் தன் மனதை பறிகொடுத்தார் கலைவாணர். மதுரம் தீர்க்கமான பார்வை. அழகான கண்கள். அறிவான செயல்கள்....தன் அழகை பேணி காப்பவர்...நாயகியாக நடிக்க வேண்டியவர். நடித்த நாயகிப்படம் தோல்வியடைந்ததால் கிடைத்த படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்தார்.

நாகம்மாளை திருமணம் செய்ததை மறைத்து மதுரத்தை திருமணம் செய்தார் அவர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போனது. பின் தன் சகோதரி டி.ஏ.வேம்பம்மாளை மணமுவந்து மணம் முடித்து வைத்தார் மதுரம்.

வேம்பம்மாளுக்கு அழகான குழந்தைகள்...கிட்டப்பா, வடிவாம்பாள், சண்முகம், நல்லதம்பி, குமரன், கஸ்தூரி, பத்மினி, சிவப்பிரகாசம். இதில் கிட்டப்பா கலைவாணரின் நல்லதம்பி படத்தில் நடித்தார். கிட்டப்பா பெங்களூரில் வசித்து வந்தார். அவருக்கு இந்திரா என்கிற மனைவி. தேன்மொழி என்கிற மகள். கிட்டப்பாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஆம்புலன்சை அழைக்க, ட்ராஃபிக்கால் ஆம்புலன்ஸ் தாமதமாக அதனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. வடிவாம்பாள் மதுரையில் வசித்தார். அவருடைய நிலத்தை வேறு ஒருவர் ஆட்டையை போட்டதாக சில வருடம் முன்பு செய்திகள் வந்தன. வழக்கும், பிரச்சினையுமாக அவர் வாழ்க்கை.

நாகம்மாளின் மகன் தான் என்.எஸ்.கே.கோலப்பன்..இவர் மணிமகுடம், கனிமுத்து பாப்பா போன்ற படங்களில் நடித்தார். கோலப்பனின் மகன், கலைவாணரின் பேரன் என்.எஸ்.கே.ராஜா 'நாகரீக கோமாளி' என்ற படத்தில் நடித்தார். 

கலைவாணரின் உற்ற நண்பர் நடிகர் கே.ஆர்.ராமசாமி. அண்ணாவின் 'வேலைக்காரி'யில் நடித்தவர். இவரது மகள் செல்வி. செல்விக்கு தன் இன்னொரு மகனை திருமணம் செய்து வைத்தார் கலைவாணர். செல்வியின் மகள் தான் என்.எஸ்.கே.ரம்யா..பாடகி....'ஆரம்பம்' படத்தில் 'என் Fuseம் போச்சு' பாடலை பாடியவர்... ..பிக்பாஸ் 2 வில் இவரை பார்த்திருக்கலாம்...ரம்யா அர்ஜுன் என்கிற பாடகரை மணந்தார். பின் டிவோர்ஸ். இப்போது சின்னத்திரை நடிகர் 'நீலக்குயில்' சத்யாவை திருமணம் செய்திருக்கிறார்..

என்.எஸ்.கேயின் மகள் டாக்டர்.பத்மினி. பத்மினியின் மகள் தான் காஸ்ட்யூம் டிசைனர் அனு. கபாலியில் ரஜினியின் உடை இவர் டிசைன் தான்...

"அஜீத்தின் சால்ட்&பெப்பர் லுக்கை பரவலாக்கி ஹிட்டாக்கியவர். அனுவின் கணவர் தான் பில்லா பட டைரக்டர் விஷ்ணுவர்தன். விஷ்ணுவர்தன் தந்தை தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர். இவர் பட்டியல், அறிந்தும் அறியாமலும் படங்களின் தயாரிப்பாளர்..விஷ்ணுவர்த்தனின் தம்பி கழுகு பட ஹீரோ கிருஷ்ணா.

கிருஷ்ணனில் தொடங்கி கிருஷ்ணாவில் முடிகிறது உறவுகள்....

Leave a Reply