• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீர்க்கட்டண விலைச்சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்-ஜீவன் தொண்டமான்

இலங்கை

மின்கட்டணம் குறைக்கப்பட்டால் நீர் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்டும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்க்கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும் தெரிவித்தார்.

மேலும் நீரை சுத்திகரிக்க மின்சாரம் முக்கிய தேவையாக இருப்பதால், மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர்க் கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
 

Leave a Reply