• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்களின் போராட்டம் நிறைவு

இலங்கை

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) யுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுகாதார ஊழியர்கள் கடந்த செவ்வாய்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன் இன்று காலை 8.00 மணியுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply