• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்த நாள் முதல் இந்த நாள் வரை..

சினிமா

நடிகர் திலகம் நடித்த பாவ மன்னிப்பு படத்தில் அவர் பாடுவதாக வரும் 'அந்த நாள் முதல் இந்த நாள் வரை..' பாடலின் இடையே வரும் 'எதனைக் கண்டான், மதம்தனைப் படைத்தான்..' என்ற வரிகளை விடாப் பிடியாக நீக்கச் சொன்ன அப்போதைய சென்சார், நடிகவேள் எம். ஆர். ராதா பேசிய இதை விட தீவிரமான வசனங்களை எப்படி அனுமதித்தார்கள்? 

கதாநாயகன் வாயிலாகச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள்; வில்லன்கள் வாயிலாக சொல்லப்படும் செய்திகளை,  இவை வில்லன்கள் அல்லது காமடியன்கள் பேசும் வசனங்கள் என்று நினைத்து, அந்த நேரத்தில் மக்கள், ரசித்து விட்டு போய் விடுவார்கள். அதற்கு மேல் அதற்கு மதிப்பு இருக்காது என்று சென்சார் தந்திரமாக நினைத்து இருப்பார்களோ? 

கலைஞர், தன் திறமையான காட்சி அமைப்புகள் மூலம் சென்சாருக்கு கடுமையான தலைவலியைக் கொடுத்து, அவர்களை படத்தின் வசனங்களை ஒன்றும் செய்ய முடியாதவர்கள் ஆக்கி, பராசக்தி படத்தில், தன் கதாநாயகன் சிவாஜி வாயிலாக சமுதாய கருத்துகளை வழங்கியதால்தான் அவை மக்களிடம்  அத்தனை விரைவாகவும், ஆழமாகவும் சென்று சேர்ந்திருக்குமோ என்றும் கருத வேண்டி இருக்கிறது. இதைப் போலவேதான் எம்ஜிஆர் கதாநாயகன் ஆக இருந்து பேசிய வசனங்கள், பாடிய பாடல்கள் வெகு மக்களை எளிதில் சென்று அடைந்தன. 

இப்போதைய கதாநாயக நடிகர்களும் சமுதாயத்துக்கு தேவையான கருத்துகளை சொல்லும் போது அவை பெரிதாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. குறிப்பாக படிப்பு தொடர்பாக கமல் முதல் தனுஷ் வரை பேசிய வசனங்கள் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதையும் இப்போது பார்த்தோம். எனவே கதாநாயக நடிகர்கள் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி சார்ந்த கருத்துகளை தொடர்ந்து பேச வேண்டும். முற்போக்கான சமுதாய மாற்றத்துக்கு துணையாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் Jayakrishnan Kani

Leave a Reply