• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வியக்க வைக்கும் சிறாப்பர் மடம் அழியவிடாது பாதுகாப்பது நமது கடமையாகும் 

இலங்கை

வியக்க வைக்கும் சிற்பக்கலைகளுடன் அமைந்துள்ள புராதன #சிறாப்பர்_மடம் கீரிமலையில்  - வரலாற்றுச் சிறப்பு
 காங்கேசந்துறை கீரிமலை நோக்கி வரும் சந்தியின் தெற்காகவும் நகுலேஸ்வரர் ஆலயத்தின் வடக்காகவும் அமைந்துள்ளது. இது வடக்கே கடல் பகுதியினையும் மற்றும் கோயில் மடங்கள் அமைந்துள்ள சூழலில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சிறாப்பர் மடத்தின் வரலாற்றுப் பின்னணி
சிறாப்பர் மடம்
பிரதேச செயலகப் பிரிவு : தெல்லிப்பளை
கிராம சேவையாளர் பிரிவு : J/226
கிராமத்தின் பெயர் : கீரிமலை
முகவரி : பொன்னாலை வீதி, கீரிமலை.
வீதி வலைப்பின்னல் : யாழ்ப்பாண நகரம் -காங்கேசன்துறை வீதி -மாவிட்டபுரம் சந்தி -பொன்னாலை வீதி -கீரிமலை.
இச் சிறாப்பர் மடம் ஆனது இலங்கையில் அமைக்கப்பட்ட மடங்களிலிலே தனித்துவமானதாகவும் பெரிதாகவும் விளங்குகின்றது. அந்தவகையில் இவ்வாறு சிறாப்பர் மடம் சிறப்புப் பெறுவதற்கு அடிப்படைக் காரணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயமாகும். இத்தலத்தினை அடிப்படையாகக் கொண்டே சிறாப்பர் மடம் அமையப்பெற்றது. புராண இதிகாசங்களில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ்வாலயமானது தற்போது நல்லூர் ஆலயம் எவ்வாறு சிறப்புப் பெற்று விளங்குகிறதோ அதே போன்ற முக்கியத்துவத்தினை இவ்வாலயம் முன்பு பெற்றிருந்தது. 
எனவே இத்தலத்தினை நோக்கி இலங்கையின் எல்லாப் பாகத்திலிருந்தும் யாத்திரிகர்கள் வருகை தந்திருந்தனர். கீரிமலையில் தீர்த்தமாடி தோசங்களை நீக்கி வந்திருந்தனர். அந்தவகையில் இவ்வாலயத்தினை சூழ பல்வேறுபட்ட மடங்கள் அமையப்பெற்றதோடு அம்மடங்களில் யாத்திரிகர்கள் தங்கிச் செல்வதோடு பல்வேறு அறப்பணிகளும் மேற்கொண்டிருந்தனர்.
இம்மடக் கட்டிடக்கலையானது ஆரம்பத்தில் கால்நடைப் பயணம் செய்யும் யாத்திரிகர்கள் மரங்களுக்குக் கீழ் இளைப்பாறிய பின் அம் மரங்களுக்கு கீழ் குடிசை அமைத்தும் இளைப்பாறியிருந்தனர். பின்னர் கட்டிடங்கள் அமைத்து அதில் தங்கி இளைப்பாறி இருந்ததோடு இதன் பரிமாண வளர்ச்சியாக தற்போது வாடிவீடுகள் காணப்படுகின்றன. அந்தவகையில் இம்மடங்களானவை பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் காலணித்துவத்தின் கீழ் முதலியார், சிறாப்பர் போன்றோர் மிகமுக்கிய பொருளாதார வலுவுடையவர்களாக விளங்கிய அதேவேளை சமுக அந்தஸ்து உடையோராகவும் காணப்பட்டனர். 18ம்,19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக்கல்வி அறிவு பெற்று காலணித்துவ வாதிகளின் கீழ் முக்கிய பதவிகள் வகித்தவர்கள் பலர் காணப்பட்டனர்.அதாவது முதலியார் ,மணியகாரர்,சிறாப்பர் என்போர் ஆங்கிலேயரின் கீழ் தொழில்புரிந்ததுடன் பல ஏக்கர் நிலங்களிற்குச் சொந்தக்காரர்களாகவும் விளங்கினர்.
 கதிரவேற் சிறாப்பர் பல இடங்களிலும் மடங்களைக் கட்டுவித்துள்ளார் ஆங்கிலேயர் காலத்தில் மிக முக்கியமான தொழிலாகக் காணப்பட்ட சிறாப்பர் தொழிலைச் செய்தவருமாவார் அதுமட்டுமன்றி அவர்கள் தமது தொழில்மூலம் பெற்றிருந்த சமுக அந்தஸ்தும் அதிகாரமும் காரணமாக அதிகாரிகளின் உடனடி அனுமதி பெற்று மடக்கட்டடங்களை அமைக்கமுடிந்தது.இதனால் அவர்கள் மடங்களை உருவக்கியதுடன் அதற்காக நிலங்களையும் மானியமாக வழங்கினர். 
சிறாப்பர் தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகவும் பொருளாதார வலுவும் ,தமிழ் ,சமயப் பற்றுடையவராகவும் விளங்கிய கதிரவேற்சிறாப்பர் கீரிமலையில் சிறாப்பர் மடத்தையும், மாணிப்பாயில் தனது வீட்டருகே வெள்ளிக்கிழமை மடம் எனும் மடங்களைக் கட்டுவித்து நடத்தியுள்ளார். (கதிரவேற்சிறாப்பர் - கீரிமலை சிறாப்பர் மடம் 1807 ஃ 1891  முன்பு மடங்களை செட்டி, முதலியார், சிறாப்பர், ஊர்ப்பெயர், ஆலய பெயர், சிங்கப்பூர் பெஞ்சனியர் என்போரால் நிறுவப்பட்டன. அந்தவகையில் சிறாப்பர் மடமானது மானிப்பாயைச் சேர்ந்த கதிரவேலு சிறாப்பர் என்பவரால் கி.பி 1807 இல் கட்டுவிக்கப்பட்டது. இதன் நோக்கங்களாக இளைப்பாறுதல், பொழுதுபோக்கு, சமய, கல்வி. கலை, இலக்கியங்களாகவும் அன்னதான, தண்ணீர்ப் பந்தல்களாகவும், இல்லற வாழ்விலிருந்து விலகி இருப்போர்க்கு தங்குமிடமாகவும் இச் சிறாப்பர் மடம் விளங்கியிருந்தது.

இவ்வாறு விளங்கும் சிறாப்பர் மடமானது மடக் கட்டடக் கலை அம்சங்களுடன் கோயில் கட்டட கலை அம்சங்களை இணைத்த வகையில் காணப்படுகின்றது. அந்தவகையில் காற்றோட்டமும், பல மக்களை உள்ளடக்கக்கூடிய தேவையையும் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் தொழில்நுட்ப அம்சங்களுடன் கலை அம்சங்களையும் வெளிப்படுத்தி இருந்தது எனலாம்.
அந்தவகையில் முற்பகுதி திண்ணை, விறாந்தை(ஏநசயனெய) பகுதியை உடையதாகவும் உள்ளே நீண்ட மண்டபங்கள், பல அறைகளை உடையதாகவும், உள் முற்றத்தை (நாற்சார்) கொண்டதாகவும் யாழ்ப்பாணத்திற்குரியதான கட்டடக் கலை அம்சங்களை பிரதிபலிப்பதோடு இக் கட்டிடத்தில் கலை செங்கல் தூண்கள், மரத் தூண்கள், கதவுகள், செடிப்பலகைகள் போன்ற அலங்காரங்களையும் கொண்டமைந்துள்ளது. இவ் சிறாப்பர் மடமானது முருகக்கல், வெள்ளைக்கல், செங்கல்; போன்றன கலந்து கட்டப்பட்டதுடன் இதுவும் வைத்திலிங்கமடத்தினைப் போல வடக்கு தெற்காக நீண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட அறைகளையும் வடக்கிலும், தெற்கிலும் அழகிய கதைச் சிற்பவேலைப்பாடுகளை உடைய முகப்புக்களைக் கொண்டமைந்துள்ளதோடு,வடக்கு வாயிலானது கீரிமலை வீதியிலும், தெற்குவாயில் நகுலேஸ்வர ஆலய முன்வீதியிலும் திறக்கின்றதுடன்  அதற்குரிய வர்ணங்களும் பூசப்பட்டுள்ளது. 
இம் முகப்புக்கள் நீண்ட குந்துகள் மேல் நிறுத்தப்பட்டுள்ளதோடு உருளை வடிவ டோரிக் (Doric) தூண்களால் தாங்கப்படுபவையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தெற்கு வாயில் தூண்கள் மரத்தால் ஆக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றது. வடக்கு வாயில் முகப்பில் நீண்ட விறாந்தைப்பகுதி காணப்படுவதோடு உள் முற்றத்தினைச் சூழ அறைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் முகப்பு வாயிலின் வெளியே சுவரோடு திண்ணையும் காணப்படுகின்றது. அத்துடன் நாவலரும், பலந்தமிழ் பெரியோர்களும் பிரசங்கங்கங்கள் நிகழ்தப்பட்ட இம் மடத்தின் வாயிலில் அமைக்கப்பட்ட கல்வெட்டானது சைவ சமயம் அல்லாதவர்களும், தூய்மையற்றவர்களும் தங்குவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடுகின்றது. அதனை
'இப்பந்தல் சைவசமயிகளல்லாத பிற சமயத்தவர்களுக்கு தாக சாந்தி செய்து  கொள்வதற்கல்லாத வசிப்பதற்கு இடம் கொடுக்காது ....கட்டிடத்திற்குள்ளாக மாமிசம் புசித்தல் ,ஆசூசப்படுத்தல் ,சுருடடுப்புகைத்தல் ஆகாது. போசனம் செய்பவர்கள் எச்சி மாற்றிப போக வேண்டியது. வசிப்பவர்கள் சமாதானமாக போக வேண்டியது.... ' என்பதன் ஊடாக அறிய முடிகின்றது. இங்கு பிற சமயத்தவர் எனக் கூறப்படுவது கிறிஸ்தவர்கள் என்ற கருத்தும், தாழ்சாதியினரினைச் சேர்ந்தோர் எனவும் கருத்துக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது(குமுதா சோமசுந்தரக்குருக்கள், 2007:25).
மேலும் இச் சிறாப்பர் மட கட்டட அமைப்பிலே கூரை அமைப்பானது இராச ஊசிக்கால் கொண்ட கூரை அமைப்பாக விளங்குவதோடு கூரைக்குப் பீலி ஓடுகளும், அரைவட்ட ஓடுகளும்,பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அத்துடன் இம் மடமானது சிறந்த கட்டடக்கலைப்பாணியில் அமைக்கப்பட்ரிந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வடக்கு வாயில் முகப்பு நீண்டு விறாந்தைப்பகுதியில் திறப்பதுடன் அவ் விறாந்தை திண்ணைப்பகுதியிலும் ,அத்திண்ணயின் நடுப்பகுதி நடுமுற்றத்திற்கான விறாந்தைப்பகுதியிலும் ,அத்திண்ணையின் நடுப்பகுதி நடுமுற்றத்திற்கான விறாந்தைப்பகுதியிலும் திறக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அம் முற்றத்தினைச் சூழ அறைகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(குமுதா சோமசுந்தரக்குருக்கள்,2007;:75). இதனை விட இம் மடத்தில் காணப்படுகின்ற மற்றுமொரு சிறப்பம்சமாக இம் மடத்தின் நடுமுற்றத்தின் மேற்குப்பக்க அறைகளின் இறுதியில் விநாயகர் ஆலயம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று அதற்கான பீடம் மட்டுமே காணப்படுவதுடன் அதற்கான விக்கிரகம் தற்போது காணப்படவில்லை எனலாம். அது மட்டுமன்றி இங்கு ஒரு Áல் நிலையம் காணப்பட்டதாக கூறப்படுவதுடன் ,இம் மடத்தின்  வடக்கு வாயிலின் இடது பக்கம் மடத்திற்கான பொருட்களினை சேமித்து வைக்கும் கிட்டங்கி காணப்படுவதுடன் முகப்பு வாயிலின் வெளியான சுவரோடு சிறிய திண்ணையும், சிறிதருகே ,தண்ணீர்த்தொட்டியும் ,ஆவுரஞ்சிக்கல் என்பனவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இம் மடம் சத்திரமாகவும் நடத்தப்பட்டதுடன், இம் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் அம் மடத்தின் முகப்பு வாயிலில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு திருவிழாக்காலங்களில் மக்களிற்கு சேவையாற்றிமை குறிப்பிடத்தக்கது.
இவ் சிறாப்பர் மடமானது வரலாற்று ரீதியாக சிறப்புப் பெறுவதற்கான மற்றுமொரு அம்சமாக இம்மடத்தில் தான் ஒல்லாந்தரினால் அழிக்கப்பட்ட்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தினை மீண்டும் புணரமைக்கப்பட வேண்டும்  என்பற்கான கூட்டம் நாவலரினால் இம் மடத்தில் தான் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் யாழ்பாணத்தில் காணப்படுகின்ற மடங்களிலே சிறாப்பர் மடத்திற்கு என காணப்படும் மற்றுமொரு தனித்துவம் புராணபடலங்கள் பாடுகின்ற மரபினைக் குறிப்பிடலாம். அந்த வகையில் ஆலயங்களிலிலும் ,மடங்களிலும் ஆரம்பகாலங்களில் புராணபடலங்கள் பாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கீரிமலை சிறாப்பர் மடத்தில் கணபதிப்பிள்ளை, சங்கரபண்டிதர் போன்றோர் புராணபடலங்கள் பாடி வந்நதமை குறிப்பிடத்தக்கது(குமுதா சோமசுந்தரக்குருக்கள்,2007:76).
அந்தவகையிலே யாழ்ப்பாணத்து மடங்களின் கட்டிடக்கலை பாரம்பரியத்தில் சிறந்ததும், மிகவும் பழமையானதும், யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையிலேயே சைவ சமயம் சார் மிகப்பெரிய மடக் கட்டிடமாக விளங்குவதும் சிறாப்பர் மடமே ஆகும். அந்தவகையிலே தற்பொழுது இம் மடமானது கூரைகளற்ற நிலையிலே இயற்கைப் பாதிப்பிற்கு உட்பட்டு வருகின்றது. எனவே இதனை விரைவாக புனரமைத்து பாதுகாக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
ஈழத்து வரலாறும் தொல்லியலும் தீபா
 

 

Leave a Reply