• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க லாட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகையைப் பெற்ற நபர்

புத்தாண்டு லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 842 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒருவர் வென்றுள்ளார்.

இந்த தொகைதான் லாட்டரி வரலாற்றில் 10வது பெரிய பரிசு தொகையாகும்.

பவர்பால் லாட்டரிக்கான புத்தாண்டு குலுக்கலில் அமெரிக்கர் ஒருவர் முதல் பரிசான 842 மில்லியன் டாலர்களை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல லாட்டரி நிறுவனமான பவர்பால் லாட்டரி பல்வேறு மெகா பரிசுகளுடன் குலுக்கல்களை நடத்தி வருகிறது.

அதன்படி புத்தாண்டை முன்னிட்டு பவர்பால் லாட்டரி 842 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதல் பரிசாக அறிவித்தது. இதற்கான குலுக்கல் சமீபத்தில் நடைபெற்றது. அதன்படி குலுக்கலில் ஜாக்பாட் அடித்த 6 எண்களை அறிவித்தனர் லாட்டரி அதிகாரிகள்.

அதன்படி லாட்டரியை வென்ற நபர், ஃபிளவர் கேஸ்ட்ல் பகுதியில் உள்ள மளிகை கடையில் இருந்து பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புத்தாண்டில் அந்த நபர் நேரடியாக 842 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட்டை வென்றதால், அந்த நபரின் வாழ்க்கை அடியோடு மாறியுள்ளது.

இந்த லாட்டரி பரிசின் மூலம் புத்தாண்டில் அமெரிக்காவின் பணக்கார நபர்களில் ஒருவராகியுள்ளார் அந்த அதிர்ஷ்டசாலி.

இந்த 842 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை என்பது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் இதுவரை வெல்லப்படாத பத்தாவது பெரிய பரிசு தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டு பரிசாக இவ்வளவு பெரிய ஜாக்பாட்டை வெல்வது இதுவே முதல் முறை என்று லாட்டரியை நடத்திய அதிகாரப்பூர்வ இணையதளமே தெரிவித்துள்ளது.

இரண்டு ஆப்ஷன்கள் இந்த லாட்டரியை வென்ற நபரின் பல தலைமுறையினர் கூட காலங்காலமாக சுகபோகமாக வாழக்கூடிய அளவுக்கு பெரும் பரிசு தொகையாக இந்த மெகா பரிசு உள்ளது.

இந்த ஜாக்பாட் பரிசை வென்ற நபர் இரண்டு வழிகளில் தனது பரிசை பெற்றுக்கொள்ள லாட்டரி நிறுவனம் ஆப்ஷன் கொடுத்துள்ளது.

அதன்படி ஜாக்பாட் பரிசை வென்ற நபர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரி பிடித்தம் போக இதுதான் முதல் ஆப்ஷன்.

இரண்டாவது ஆப்ஷனாக வெற்றியாளர் முழுத் தொகையையும் மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரி பிடித்தம் போக வெற்றியாளருக்கு மொத்தம் 425.2 மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குலுக்கல் நடைபெற்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் பரிசை வென்ற நபர் குறித்த தகவல் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு தின ஜாக்பாட் மிச்சிகனில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல அதிகார வரம்பிற்குட்பட்ட, அரசு நடத்தும் லாட்டரி ஆகும்.

இந்த ஜாக்பாட் இதுவரை வென்ற ஐந்தாவது பெரிய ஜாக்பாட் ஆகும். இது அமெரிக்க லாட்டரி வரலாற்றில் வென்ற 10-வது பெரிய ஜாக்பாட் மற்றும் இதுவரை வென்ற இரண்டாவது பெரிய லாட்டரி ஜாக்பாட் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply