• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனிடம் கோபப்ட்ட எம்.எஸ்.வி - எம்.ஜி.ஆர் ரியாக்ஷன்

சினிமா

எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவராக இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை. இதில் மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதை பொருத்து தான் சமூகத்தில் இறந்த பின்னும் அவனது பெயர் நிலைத்திருக்கும். அதேபோல் வாழும்போது அடுத்தவர் மரணத்தை பார்த்திருந்தாலும் தான் இறந்த பிறகு எல்லோரும் எப்படி இருப்பார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் தான் இறந்த பிறகு யார் வருவார், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிய கண்ணதாசன் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் காலத்தை வென்ற கவிஞர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. தனது பாடல் வரிகளின் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்திய கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் பதில் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

கண்ணதாசன், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டனர். பல திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். அதேபோல் இவரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்தால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றுவிடும் என்று பேச்சுக்கள் இருந்த காலக்கட்டம் தமிழ் சினிமாவில் இருந்துள்ளது.

1962-ல் ஏப்ரல் மாதம் திடீரென திரையுலகில் உள்ள பலருக்கும் கவிஞர் கண்ணதாசன் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனால் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட நிலையில், பல ஸ்டூடியோக்களில் நடந்து வந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. கண்ணதாசனின் நெருங்கிய நண்பரான எம்.எஸ்.விஸ்வநாதன் தனது ரிக்கார்டிங்கை நிறுத்திவிட்டார். மேலும் இந்த மரண செய்தியை கேட்டு பலரும் கவிஞர் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு, எம்.ஆர்.ராதா, இயக்குனர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என பலரும் கண்ணதாசன் வீட்டுக்கு விரைந்து வந்து கவிஞருக்கு என்ன ஆச்சு, அவர் எப்படி இறந்தார் என்று விசாரிக்க தொடங்கிவிட்டனர். இவர்களின் பதபதப்பை மாடியில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்ததுக்கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன், இதற்கு மேலும் இவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க கூடாது என்று நினைத்து திடீரென கதவை திறந்து தனது வீட்டின் ஷோபாவில் வந்து அமர்கிறார். கண்ணதாசனை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

வீட்டிற்கு வந்த அனைவரும் அவரை நலம் விசாரிக்க, எம்.எஸ்.வி கண்ணதாசனை கட்டிபிடித்து அழ தொடங்கியுள்ளார். ‘பலரும் உங்களுக்கு 100 வயசுதான் என்று கூறி வருகின்றனர். அதேபோல் உங்களுக்கு கண்ணுபட்டு விட்டது உடனடியாக சுத்தி போட வேண்டும் என்று சொல்கிறார். இதையெல்லாம் கண்ணதாசன் பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும் கவிஞர் இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்பியது யார் என்று பேச தொடங்குகின்றனர்.

அப்போது கண்ணதாசன் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். இந்த செய்தியை பரப்பியது நான் தான். நான் இறந்தால் எப்படி இருக்கும் என்ற மனநிலையை பார்க்க ஆசைப்பட்டேன் அதனால் தான் இப்படி பண்ணினேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு டேய் விச்சு சாப்பிட்டுவிட்டு படுத்தேன் நல்லா அசந்து தூங்கிவிட்டேன். ஆனாலும் அடுத்த சில மணி நேரங்களில் எழுந்து விட்டேன். இருந்தாலும் நான் எழுந்திருக்கவில்லை என்றால் அது மரணம் தானே!

அதனால் நான் மரணம் அடைந்துவிட்டால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கத்தான் இப்படி செய்தேன் என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கண்ணதாசன் கூறியுள்ளார். இதை கேட்டு அனைவரும் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இருந்துள்ளனர். இந்த செய்தி பரவிய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இருவரும் பிரிந்திருந்தாலும், எம்.ஜி.ஆர் போன் செய்து கண்ணதாசன் குறித்து விசாரித்துள்ளார்.
 

Leave a Reply