• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசனுக்கு ஐடியா கொடுத்த ஜெயலலிதா.. கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல் உருவான கதை

சினிமா

பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெற்ற கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடீ கோப தாளம் என்ற பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

1960-70 காலகட்டத்தில் சிவாஜி கணேசனுக்கு பட்டிக்காடா பட்டணமா சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது. சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருது, சிறந்த படம், சிறந்த நடிகை என இரண்டு பிலிம்பேர் விருதுகளை அள்ளிய இந்தப் படம் கருப்பு வெள்ளை திரைப்படங்களில் ரூ. 1 கோடி வசூலித்த ஒரே படம் என்ற பெருமையை பெற்ற படமாக உள்ளது.

175 நாள்கள் ஓடிய இந்தப் படம் 1972ஆம் ஆண்டில் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான காமராஜர் இந்தப் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியது தனியொரு அங்கீகாரத்தை பெற்று தந்தது.

ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்தப் படம், பிரபல ஆங்கில கவிஞர் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ என்ற மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக அமைந்திருந்தது. கிராம வாழ்க்கைக்கும், நகர வாழ்க்கை இடையேயான வாழ்வியலை தத்ரூபமாக பேசும் விதமாக இருக்கும் இந்தப் படத்துக்கு பாலமுருகன் கதை, வசனம் எழுத, பி. மாதவன் இயக்கியிருப்பார்.

படத்தில் பிரதான கதாபாத்திரங்களான சிவாஜி கணேசன், ஜெயலலிதா தவிர மனோரமா, வி.கே. ராமசாமி, சுகுமாரி எம்.ஆர்.ஆர்.வாசு, சுபா, எஸ்.என். லட்சுமி உள்பட பலரும் ரசிக்கும் விதமாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். கண்ணதாசன் வரிகளில் புகழ் பெற்ற கிளாசிக் பாடலான அடி என்னாடி ராக்கம்மா என்ற பாடல் இடம்பெற்றது இந்த திரைப்படத்தில்தான். இதுதவிர அம்பிகையே ஈஸ்வரியே, கேட்டுக்கோடி உருமி போன்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. இப்பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

கேட்டுக்கோடி உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்ஹா
உங்கள் தாளங்கள் ஜங்கிள்
பென்னை பாருங்கள் அங்கிள்
சேர்ந்து போடுங்கள் புல்புல்
ஆட்டம் கொண்டாட்டம்ஹோஹோ
ஆட்டம் கொண்டாட்டம்ஹோஹோ"

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். இன்று கேட்டாலும் அனைவருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும் வகையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அமைந்திருக்கும். கண்ணதாசன் அப்படி அருமையான வரிகளால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டு இருப்பார்.

அப்படி இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கேட்டுக்கோடீ உருமி மேளம் பாடல் கண்ணதாசன் வரிகள் எழுதியுள்ளார். ஆனால் இந்தப் பாடலின் முதல் வரியை எழுதிவிட்டு இரண்டாம் வரி என்ன எழுதுவது என்று தெரியாமல் கண்ணதாசன் இருந்துள்ளார். அதாவது இரண்டாவது வரி எழுதியுள்ளார். ஆனால் அது அவருக்கும் திருப்தி இல்லை அங்கு உள்ள படக்குழுவினருக்கும் அந்த வரிகளில் திருப்தி இல்லை. அதனால் அந்த வரிகளுக்கு பதிலாக வேறு ஒரு வரியை போடலாம் என யோசித்துக் கொண்டு இருந்துள்ளன.

அப்போதுதான் ஜெயலலிதா அங்கு வந்து போட்டுக்கோடீ கோப தாளம் என்ற வரிகளை போட்டுக் கொள்ளலாமே என்று ஐடியா கொடுத்துள்ளார். இதைக் கேட்ட கண்ணதாசன் இதுவும் நன்றாக உள்ளது என அந்த வரிகளை அப்படியே சேர்த்துக் கொண்டார். இப்பாடல் இன்றுவரை ஹிட் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த பாடல் உருவானது இப்படித்தான்.
 

Leave a Reply