• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிரிப்பலையான சிவாஜி பட கம்போசிங்

சினிமா

பாடலை தேர்வு செய்த தபால்காரர்... கண்ணதாசன் சொன்ன ஜோக் : சிரிப்பலையான சிவாஜி பட கம்போசிங்

1967-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கே.ஆர் விஜயா இணைந்து நடித்த திரைப்படம் தங்கை. தயாரிப்பார் நடிகர் என பன்முறை திறமை கொண்ட கே.பாலாஜி இந்த படத்தை தயாரித்திருந்தார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த சிவாஜி படத்திற்கான ஒரு பாடலை ஒரு தபால்காரர் தேர்வு செய்ததும், அதற்கு கண்ணதாசன் சொன்ன ஒரு ஜோக்கும் அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

1967-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கே.ஆர் விஜயா இணைந்து நடித்த திரைப்படம் தங்கை. தயாரிப்பார் நடிகர் என பன்முக திறமை கொண்ட கே.பாலாஜி இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க அதனைத்து பாடல்கயும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அதனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கில் இருந்தபோது ஒரு பாடலுக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் 8 டியூன்களை போட்டுள்ளார். அனைத்து டியூன்களையும் கேட்ட, தயாரிப்பாளர் கே.பாலாஜி எல்லாமே நல்லா இருக்கு எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு குழப்பத்தில் இருந்துள்ளார். அப்போது தபால் டெலிவரி கொடுப்பதற்காக தபால்காரர் வந்துள்ளார்.

அவரை பார்த்த தயாரிப்பாளர் பாலாஜி கொஞ்சம் நில்லுப்பா என்று சொல்லிவிட்டு, எம்.எஸ்.வியிடம் அந்த 8 டியூன்களையும் வாசிக்க சொல்லியுள்ளார். எம்.எஸ்.வியும் அந்த 8 டியூன்களை வாசிக்க, அந்த தபால்காரர் ஒரு டியூனை தேர்வு செய்துள்ளார். அந்த பாடல் தான் கேட்டவரெல்லாம் பாடலாம் என்ற பாடல். இந்த பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து அடுத்த பாடலுக்கான கம்போசிங் நடைபெறும்போது எம்.எஸ்.வி டியூனை வாசித்துள்ளார். இதை கேட்ட பாலாஜி அருமையாக இருக்கிறது இதை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, உடனடியாக அருகில் இருந்த கண்ணதாசன் என்ன ஆச்சு இன்னும் அந்த தபால்காரர் வரவில்லையா என்று கேட்க அங்கிருந்த அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளனர்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply