• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்-ஜனாதிபதி

இலங்கை

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற சேர்.பொன். அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே அவர் இதனைக் தெவித்தார்.

இந்த நிகழ்வின்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சேர்.பொன்.அருணாச்சலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பாக அதிக நம்பிக்கை கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.

அந்த கொள்கையை பின்பற்றிய டீ.எஸ்.சேனநாயக்க அனைத்து இனத்தவரையும். மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையர்களின் தேவைகள் என்ற வேலைத்திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025 இற்குள் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தேசம் என்ற வகையில், அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply