• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் மீது செருப்பு வீசியதை தவிர்த்திருக்கலாம்- விஷால் பேட்டி

சினிமா

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து நடிகர் விஷால், விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், "இந்த வீடு எனக்கு புதிதல்ல. நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்று இந்த வீட்டிற்கு வரும் போது பிரேமலதா அம்மா சொன்னது விஷயம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் பத்திரத்த மீட்டு வரும் பொழுது ஒரு குழந்தை போன்று லாக்கரில் உள்ள உன் நகைகளை எடு பத்திரத்தை வைக்க வேண்டும் என்று சொன்னது காதில் ஒலிக்கிறது. ஒரு நடிகராக மட்டுமல்ல ஒரு மனிதனாக பெயர் வாங்குவது கடினம். விஜயகாந்த் என்ற வார்த்தை அடி வயிற்றில் இருந்து ஒவ்வொருவரும் கூறுவார்கள். அந்த வயிற்றை நிரப்பும் சாமி விஜயகாந்த். எத்தனையோ லட்சம் பேருக்கு அவர் சாப்பாடு போட்டுள்ளார்" என்று பேசினார்.

மேலும், விஜய் மீது செருப்பு வீசியது குறித்த கேள்விக்கு, "கூட்டம் இருக்கும் பொழுது யார் செருப்பை எடுத்து அடித்தார்கள் என்று நாம் யோசிக்க முடியாது. அதையும் தாண்டி ஒரு நடிகர் அவருக்கு பிடித்த நடிகர், கலைப்பயணத்தில் அவரின் முக்கியமான தூணாக இருந்த நடிகரை பார்க்க வந்திருக்கிறார். அதனால் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்ன நடக்குது என்று யாருக்கும் தெரியாது" என்று பேசினார்.
 

Leave a Reply