• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை

இலங்கை

நாட்டில் நாளாந்தம் சுமார் 300 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 38,164 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரை 83,065 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் 65 டெங்கு அபாய வலயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருவருக்கு 48 மணித்தியாலங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அது டெங்குவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்காக தகுதியான வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட வேண்டுமெனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply