• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட ராதா மகள் கார்த்திகா நாயர்.

சினிமா

திரையுலகில் பிரபலமான நடிகை ராதா. இவருடைய மூத்த மகள் கார்த்திகா நாயர். இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இதன்பின் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் அவருக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். சமீபத்தில் தான் நடிகை கார்த்திகாவுக்கு திருமணம் நடைபெற்றது.

ரோஹித் மேனன் என்பவரை மணமுடித்த கார்த்திகா நாயருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. இவருடைய திருமணத்திற்கு திரையுலக சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கிருந்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கார்த்திகா நாயர் பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கூட அவருடைய கணவர் இல்லையே என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இந்த அனைத்து புகைப்படங்களையும் எடுத்ததே தன்னுடைய கணவர் ரோஹித் தான் என கார்த்திகா நாயர் பதிவு கூறியுள்ளார். 
 

Leave a Reply