• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 82 ஆயிரத்து 655 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் இங்கு 17 ஆயிரத்து 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 643 ஆகும்.

இது தவிர கண்டி, புத்தளம், குருநாகல், மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேநேரம், இந்த மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 165 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெங்குத் தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அப்பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 

Leave a Reply