• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கில் சிறுவர்களின் உயிரிழப்பு - விசாரணைகளில் திடீர் திருப்பம்

இலங்கை

அண்மையில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பல்வேறு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இஸ்லாமபாத் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் இறந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எல் றபீக் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகணவிடம் விசாரணை முன்னெடுப்பு தொடர்பில் விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

அத்துடன் அம்பாறையில் மத்ரஸா ஒன்றில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் விசாரணை முன்னெடுப்புத் தொடர்பாக அஜித் ரோகணவிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இவ்விரு மாணவர்களின் விசாரணை முன்னெடுப்புக்களை கவனத்திலெடுத்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண மேலதிக புலன்விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளைப் பொலிஸாருக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply