• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்மாதிரியான பெண்தலைமைத்துவத்திற்கான விருது

கனடா

அமெரிக்காவின் Women Icon  Times Women மற்றும் world Women Council உடன் இணைந்து   வழங்கும் "முன்மாதிரியான பெண்தலைமைத்துவத்திற்கான விருது" ,  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் .ரூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு

அமெரிக்காவின் Women Icon  Times Women மற்றும் world Women Council உடன் இணைந்து   பெருமையுடன் வழங்கும் "முன்மாதிரியான பெண்தலைமைத்துவத்திற்கான விருதை" வென்று எமது நாட்டிற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன்  அவர்களை வாழ்த்துவதில் அனைவரும் பெருமைகொள்கின்றனர்.

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கிவரும் Women Icon அமைப்பானது, தங்களின் சொந்த வாழ்க்கையில் சாதித்த பெண்களின் திறமையை சிறப்பிக்கும் வகையில் விருதினை வழங்கி கொண்டாடுகின்றது. 

ஒருவரின் திறமை மற்றும் செயல்திறனுக்காக அவரை பாராட்டுவதனூடாக அடுத்த கட்டத்திற்கு முன்னேற அவர்களை ஊக்குவிக்கின்றது. 

எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் நுழைவாயிலாக இருக்கும் சாதனையாளர்கள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும். மனவுறுதிக்கும், உழைப்புக்கும் முன்னுதாரணமான பெண்கள் கெளரவப்படுத்தப்படல் வேண்டும்.

ஒரு பெண்ணின் சாதனைகளைப் புகழ்ந்து, அவர்கள் விரும்பும் துறையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாகவே விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இவ் விருதானது பெண்களை எந்த பிரச்சனையையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்நாள் இலக்குகளை அடைய தூண்டுகிறது.

இந்த சமூகத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் பெண்கள் மற்றும் இந்த தேசத்தை பெருமைப்படுத்த நினைக்கும் பெண்களை அந்த மரியாதைக்குரிய தருணங்கள் ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. 

வளங்கள் மிகப் பெரியவை, மக்கள் அவற்றை மையப்படுத்திய இலக்குடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்த விருது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சிறந்த உத்வேகமாகவும், எதிர்காலத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கின்ற தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று நம்பலாம்.

Leave a Reply