• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்.மீசாலையில் பற்றியெரிந்த வர்த்தக நிலையம்

இலங்கை

யாழ். மீசாலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பெருமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினையடுத்து அப்பகுதிக்கான மின் விநியோகமும் சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தீ விபத்தினையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply