• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனியைப் பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

இலங்கை

“யாழில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சங்கம் ஊடாக கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இத்தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை சீனியை பதுக்கி வைத்து, தட்டுப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறானவர்களை நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு  எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு  சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply