• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் வாகன விபத்து - இளைஞன் உயிரிழப்பு

இலங்கை

கிளிநொச்சி,கல்மடுநகர் பகுதியில் நேற்று மாலை இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்,  இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.
 

Leave a Reply