• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி

இலங்கை

இனிவரும்  அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஒட்டக சின்னத்தில்  போட்டியிட‌வுள்ள‌தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே , ஐக்கிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் முழுப் பெயர், தேர்தல் மாவட்டம், தொகுதி என்பவற்றை குறிப்பிட்டு தேசிய அடையாள அட்டையின் பிரதியில் கையொப்ப‌ம் இட்டு கீழ் உள்ள வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஸப்வான் சல்மான் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள அல்லது விபரங்களை அனுப்பிவைக்க கட்சியின் தலைவர்( 0777570639 )மற்று,ம் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் (0771676166 ) தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply