• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம்

சினிமா

"காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம்" என்கிறார் கவிஞர் வைரமுத்து. காதல் இல்லாத மனிதர்களைப் பார்க்க முடியாது. இருவருக்கும் இடையே உள்ள அதீத அன்பைக்குறிக்கும் சொல்தான் காதல். பழங்காலத்தில் அதாவது சங்க காலத்தில் காதலை காமம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். ஏழு திணையாக தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். திணை என்பது ஒழுக்கம். 
அன்பின் ஐந்திணை என்பது புணர்தல்,இருத்தல்,ஊடல், இரங்கல் ,பிரிதல் முதலிய ஐந்துவிதமான காதல் உணர்வுகளைப்பேசுவது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதலையும் பெருந்திணை என்பது வயதில் அதிகமானவர்கள் மீது சிறியவர்கள் கொள்ளும் காதலைக் கூறுவது. இவையே காதலின் தன்மைகள் ஆகும்.
வெவ்வேறு இடத்தில் இருக்கும் காதலர்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த தூதுவர்களைப் பயன்படுத்தினார். பறவைகளே தூது செல்ல அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. தூது இலக்கியம் என்றே தனிவகை இலக்கியம் பக்கி இயக்கக் காலத்தில் தொடங்கி பிறகு நாயக்கர் காலத்தில் வளர்ச்சி அடைந்தது. எ.கா நெஞ்சு விடு தூது, அன்னம் விடு தூது,கிளி விடு தூது போன்றன. அதன்பிறகு ஓலையை அனுப்பினார்கள். ஓலை கால வளர்ச்சியில் கடிதத்திற்கு வந்தது. தூது இலக்கியம் போல கடித இலக்கியமும் தமிழில் வளர்ச்சி அடைந்தது. 
கடிதத்தைப் பற்றி பல கவிதைகளும் பாடல்களும் உள்ளன. கடிதம் எத்தனை பேரின் காதல்களை, சுபச்செய்திகளை, துக்கங்களை,சுமந்து சென்றிருக்கும்.
இப்போது பார்க்கப் போவது கடிதம் பற்றிய பாடல்தான். 1999 ஆம் ஆண்டு ஏ.ஆர். ரகுமான் இசையில் ஜோடி படத்திற்காக கவிப்பேரரசு அவர்கள் எழுதிய ஒரு பாடல்தான் "காதல் கடிதம் தீட்டவே மேகமெல்லாம் காகிதம்" என்ற பாடல்.
மேகத்தைக் காதிகமாகக் கொண்டு ஒரு காதல் கடித்தை எழுதப்போகிறேன். ஆனால் அதற்கு பேனாவின் நீலம் பத்தாது. வானின் நீலத்தைக் கொண்டுவரவேண்டும். ஏனெனில் காதலர் பேசிக்கொள்ள அவ்வளவு வார்த்தைகள் உள்ளன.
"காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீா்ந்திடும்"
கடிதம் எழுதினால் மட்டும் போதுமா அதைக்கொண்டு உரியவரிடம் சேர்க்க இடையில் ஒரு அஞ்சல்காரர் வேண்டுமல்லவா. மேகத்தை வளைத்து எழுதும் கடித்தைத் தூக்கிச் செல்ல மனிதர்களால் முடியாது அதனால் கவிஞர் அஞ்சல்காரர்களாக நிலவையும் சூரியனையும் மாற்றுகிறார். இவர்கள் அஞ்சல்காரர்களாக இருப்பதால் கடிதம் பகல் இரவாக வந்து சேரும்.
"சந்திரனும் சூயனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்

அஞ்சல் உன்னைச் சோந்திடும்"
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர். அதைப்போல கடிதத்தில் இருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உயிரோட்டமானவை. அதைத்தான் 
"கடிதத்தின் வாத்தைகளில்
கண்ணா நான் வாழ்கிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ" என்கிறார்.
கடிதம் காதலியிடம் இருந்து காதலனுக்கு வந்து விட்டது.பிரித்துப் படிக்க வேண்டும். ஆனால் கடித்தைப் பிரிக்க கவனமாக இருக்க வேண்டும்.ஆர்வத்தால் கிழித்துவிடக்கூடாது ஏனெனில் அதற்குக் காயப்படும். அது அவள் எழுதியதாயிற்றே. அதனால் தான் காதலன் பூவைக்கொண்டு திறக்கிறான்.கடித்தைப் பூவைக்கொண்டு திறப்பாக எழுதியிருப்பது வியத்தகு கற்பனை.
"பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கிறேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ"
காதலியின் கால் கொலுசில் மணியாகவாவது மாறி மஞ்சத்தில் சிணுங்க ஆசைப்படுகிறான்.  மஞ்சத்திற்கு வந்தபிறகு எப்படித்தூங்க முடியும். தப்புச்செய்ய மனம் முற்படாதா அப்படிச் செய்ய முற்பட்டல் நீ ஒப்புக்கொள்வாயா என்னவளே என்கிறான் காதலன். அது அவன் காதலி அதனால் தான் உரிமையாகக் கேட்கிறான். ஆனால் அவளின் ஒப்புதலுக்காவும் விண்ணப்பம் போடுகிறான் இதையும் கவனிக்க வேண்டும்.
"கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா
காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா
தப்பு செய்யப் பாத்தால்
ஒப்புக் கொள்வாயா
என்னவளே உன்மேலடை நீங்கும்போது வெட்கம் உனக்கு முந்தானையாக மாறுகிறதா ?
"மேலாடைநீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா"
கடித்தை வைத்து எழுதப்பட்ட அற்புதமான பாடல் இது. இசையும் வரியும் கேட்கக் கேட்க மனதை இளகுவாக்குகிறது. இப்பாடலை எஸ்.ஜானகி மற்றும் உன்னி மேனன் இணைந்து பாடியுள்ளனர்.

Leave a Reply