• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வான் மீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே

சினிமா

மெல்லிசை மன்னர்: மெல்ல திறந்தது கதவு படத்திற்காக நானும் ராஜாவும் கம்போசிங் உட்காரும் போது சும்மா ஒரு ஐடியா கொடுத்தாரு. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுன்னு “வான் மீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே” பாடலை சொல்லி, “இந்த டியூன் மாதிரி இருக்கனும் ஆனால் இந்த சாயல் தெரிய கூடாது, இப்படி ஒன்னு பண்ணுவோம் அண்ணே...” என்று சொல்ல, வான் மீதிலே வார்த்தையை “வா வெண்ணிலா தா நனானே தானனானே தானனேனே” என்று டியூன் அமைக்க உருவானது தான் “வா வெண்ணிலா உன்னை தானே” பாடல்... இந்த பாட்டை பொறுத்த வரை நான் அழகான பிள்ளையை பெற்று கொடுத்தேன். அதுக்கு நல்லா அலங்காரம் மூக்குத்தி பவுடர் அடிச்சி கொண்டை சட்டை எல்லாம் போட்டு கொடுத்தது ராஜா...”

இசைஞானி: ஒரு முறை பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பண்ணீட்டிருக்கும் போது பக்கத்து தியேட்டரில் விஸ்வனாதன் அண்ணனும் ரெக்கார்டிங் பண்ணீட்டு இருந்தாரு. அப்ப கரண்ட் கட் ஆக ரெண்டு பேரும் சந்தித்து பேசீட்டு இருக்கும் போது “ வான் மீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே” பாடலை பாடி “இது எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அண்ணே” என்று சொல்ல, எம்.எஸ்.வி “இது நான் இசை அமைத்த பாடல்” என்று கூற,  ஆச்சர்யத்துடன் “இது சி.ஆர்.சுப்பராமன் இசைன்னு நினைச்சிட்டு இருந்தேன் அண்ணே” என்று கேட்க “இல்லை சண்டி ராணி படத்துக்காக நான் இசை அமைத்த பாடல்” என்று சொன்னார். AVM தயாரிப்பில் உருவான மெல்ல திறந்தது கதவு படத்திற்காக இருவரும் இணைந்து இசை அமைக்க உட்கார்ந்த போது இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வர, வான் மீதிலே இன்ப தேன் மாறி பெய்யுதே பாடல் போல ஒரு பாடல் கம்போஸ் பண்ணனும்னு கேட்க, அண்ணன் டியூன் போட்டது தான் “வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுது” பாடல்... 

நீங்க கொடுத்த படத்திற்கு ஈ கண்டெண்டே கரெக்ட். இது கொறச்சி ஓல்ட் கண்டெண்ட் தான். பட் கோல்ட்... போட்டாச்சு போட்டாச்சு ப்ரூ Andrew RS

Kannan Natarajan

Leave a Reply