• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் ரஜினி கொண்டாடப்படும் அளவிற்கு ஏன் கமல்ஹாசன் கொண்டாடப்படவில்லை?

சினிமா

கமல் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் படங்களை தேர்வு செய்தார். ரஜினி தனது ரசிகர்களை என்ன தேவை என்று தெரிந்து கொண்டு அவர்களை சந்தோஷப் படுத்துவதற்காக படங்களை தேர்வு செய்தார்.
கமல் நடிப்பால் திரையுலக ரசிகர்களை கவர்ந்தார். ரஜினி தனது ஸ்டைல் இனால் ரசிகர்களை கவர்ந்தார்.
கமல் பலவகை (genre) திரைப்படங்களில் நடித்தார். ரஜினி இதுதான் எனது வகைத் திரைப்படம் என்று தெரிந்து கொண்டு அந்த எல்லைக்குள் நடித்து வந்தார்.
ரஜினி தமிழ் திரையுலகில் நுழையும் போது கமல் ஏற்கனவே 25 படங்களுக்கு மேல் நடித்து தன்னை ஒரு நல்ல நடிகர் என்று தமிழ் திரையுலகிற்கு நிரூபித்துவிட்டார்.

எண்பதுகளின் பிற்பாதியில் தன்னை ஒரு நம்பகத்தன்மையான வணிக பொழுதுபோக்கு கதாநாயகனாக நிலைநாட்டினார் ரஜினி.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என மாறி மாறி வெற்றிப்படங்களை கொடுத்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுப்பது பெரும்பாலும் பொழுதுப்போக்கிற்காக என்ற நிலை வந்த பொது ரஜினி படங்கள் அந்த மசாலாவை சரியாக கொடுத்தது. இதுதான்பா கதை என்று அதுவரை நேரடியாக பார்த்துவந்தவர்களுக்கு ஒரு வேளை இதை சொல்ல வரரோ இல்ல அதை தான் இப்படி சொல்றாரோ என்ற யோசனைக்கு கொண்டு சென்றது கமலின் படங்கள் 2000திற்கு பிறகு. அந்த நேரத்தில் இவர் தான் ஹீரோ இவங்க தான் ஹீரோயின் இவர்தான் வில்லன் என்ற அடிப்படை அளவில் இருந்த ரஜினி படங்கள் ரசிகர்களை குவித்தது. அது இப்போவும் அப்படியே தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.
பொதுவாக கமலின் படங்களை எதிர்காலத்திற்கான படங்கள்( Ahead of its time) என்று கூறுவர். அதனால் தான் என்னமோ 2003இல் வெளிவந்த அன்பே சிவம் படத்தை அதற்கு பல வருடங்கள் கழித்து கொண்டாடுகிறோம்.
பல பரிசோதனைகள் பண்ண கமலை ஏதோ ஒரு நிலையில் கை கொடுத்து தூக்காம விட்டுட்டோம். ரஜினி தான் இப்போது பெயருக்கும் புகழுக்கும் கொண்டாடப்படுவதற்கும் கண்டிப்பா தகுதி ஆனவர் தான்.
ஆனால் அதே நிலையில் கமலை வைக்க தமிழ் திரைப்பட ரசிகர்களா கண்டிப்பா தவறிட்டோம். இது எனது தனிப்பட்ட கருத்தே...
படம்: ஆனந்த விகடன்!
 

 

Leave a Reply