• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Darkness Vs light.

சினிமா

சக்திவேல் நாயக்கர். Darkness Vs light. இந்த சண்டை எப்போதும் மணிரத்னம் படங்களிலும் கமல் படங்களிலும் இருக்கும். Personality க்கு உள்ளேயும் நடக்கும். வெளியேயும் நடக்கும். அதில் shades, layers எல்லாமும் இருக்கும். அதன் வெளிப்பாடு போல இந்த Light-Dark theme. Title intro நன்றாக எடுத்திருக்கிறார்கள். 

கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்தில் எல்லாம் மணிரத்னத்துடன் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு. அன்பறிவ் இருவரினதும் சண்டைப் பயிற்சி. மணிரத்னத்தின் இயக்கம். கமல்ஹாசனின் நடிப்பு. அந்தப் பேச்சுவழக்கு. எல்லாவற்றையும் இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் ரஹ்மானின் பின்னணி இசை. 

நாயகன், தளபதி, அக்னி நட்சத்திரம், ஆயுத எழுத்து, செக்கச் சிவந்த வானம் என்றெல்லாம் க்ளாஸாக கவிதையாக தலைப்புப் பார்த்து ஆங்கிலமானாலும் Thug life என்று சாதாரண மொழியில் மணிரத்னத்தின் தலைப்பு அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏதும் காரணம் இருக்கலாம். மற்றபடி அட்டகாசமான frames. இசை. கமலின் நடிப்பு. 

துல்கர், த்ரிஷா, ஜெயம் ரவி என்று பலர் இணைகிறார்கள். கமலுக்கு என்றால் மணிரத்னம் சாதாரணமாக எழுதமாட்டார். எதிர்பாராததெல்லாம் எதிர்பார்க்கலாம். இந்த ரஹ்மான் வேறு தன் குருவுக்கு மட்டும் அட்டகாசமாக இசை தந்துவிடுகிறார். Title intro க்கே இப்படி மிரட்டினால் என்னாவது 

#KH234

Sudharshan Subramaniam

Leave a Reply