• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகம் முழுவதும் விஜய்யின் லியோ திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிக்க கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ.

Seven Screen Studio தயாரிக்க அனிருத் இசையமைப்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

ஆனால் விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.

விஜய் என்ற பெயருக்காகவே படம் 15 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி படத்தின் வெற்றிவிழா படு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இப்போது விஜய் லியோ படத்தின் சக்சஸ் மீட் கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது.

படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க தினமும் படத்தின் முழு வசூல் விவரத்தை வெளியிட்டு வருகிறோம். தற்போது உலகம் முழுவதும் படம் இதுவரை ரூ. 575 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Reply