• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. 

பல காதலுக்கு உயிர் கொடுத்த ஜானகி பாட்டு.. ஆனால் சொல்லாத அவர் காதல் இப்படியா ஆகணும்? லீக்கான ரகசியம்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை அமைப்பில் அதிகமான பாடல்களை பாடிய ஜானகியின் காதல் பாடல்கள் பலருடைய மனதை கவர்ந்தது.

ஜானகி என்று அவரை சொல்வதை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் அவரை ஜானகி அம்மா என்றுதான் அழைத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பலருடைய மனதில் வாழ்ந்து வருகிறார்.

பல பேர் காதலுக்கு மருந்தாக இவருடைய பாடல்கள் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் காதலித்த நபரிடம் அவருடைய காதலை சொல்லவே இல்லையாம்

பாடகி எஸ் ஜானகிக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. 80ஸ் காலத்தில் இருந்து 2k கிட்ஸ்கள் காலம் வரைக்கும் அவர் தொடர்ச்சியாக பல பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் இளையராஜா முதல் முதலில் இசையமைத்த "அன்னக்கிளி" என்ற திரைப்படத்தில், "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடலை பாடி பலருடைய மனதில் கவர்ந்து, யார் இந்த குரலுக்கு சொந்தக்காரர் என்று தேட வைத்தவர் தான் இவர்.

இந்தப் பாடல் தான் ஜானகியை பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆக்கியது என்று சொல்லலாம். அதைத் தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு ஜானகி முதல் முதலாக 1957ஆம் ஆண்டு வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் தான் இவருடைய முதல் பாடலாம்.

இந்த பாடல் வெளி வந்த அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பல பாடல்களில் பாடிக்கொண்டிருந்தாலும் 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

அதுபோல 1992 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த எஸ் ஜானகிக்கு ஞானகான சரஸ்வதி என்ற பட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்தி பாடல்களை தாமே எழுதி இசை அமைத்து பாடியும் இருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையிலேயே பெண்கள் சாதிப்பதற்கு பெரும் பாடாக இருக்கிறது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு எஸ் ஜானகி பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இசை துறையில் பல வெற்றிகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு ஜானகி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் தானாம். டீனேஜ் முதலே இசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல வருடங்களாக இசைக்கச்சேரிகளில் தான் பாடிக் கொண்டிருந்தார்.

சாவித்திரி ஜெமினி நடிப்பில் உருவான 'கொஞ்சும் சலங்கை' என்ற படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடலை அப்போது முன்னணி பாடகியாக இருந்த பி சுசிலா தன்னால் பாட முடியாது என்று சொல்லிவிட்டாராம். ஏனென்றால் அந்த பாடல் நாதஸ்வர சரத்தோடு இணைந்து பாடும் வகையில் இருக்குமாம். ஆனால் ஜானகி அந்தப் பாடலை பாடி பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.

அதுபோல இளையராஜா ரொம்பவே கோபமானவர். அவரோடு சேர்ந்து வேலை செய்வது ரொம்பவே கடினம் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஜானகி பல திரைப்படங்களில் இளையராஜா இசை அமைப்பில் பாடியிருக்கிறாராம். அதுபோல ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவர் யார் என்றால் ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன் தானாம். ஆனால் அவர் தன்னுடைய தந்தையிடம் ஜானகியின் திறமை வெறும் இசை கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. சினிமா பாடல்களில் பாட வைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம். அவரோட அட்வைஸ்சால் தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

இப்படி தன்னுடைய இசைப்பயணம் துவங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது ஜானகிக்கு ஆரம்பத்தில் நட்பு இருந்த நிலையில் பிறகு காதலாக மாறி இருக்கிறது. எத்தனையோ கதாநாயகிகளின் காதலை அழகாக வெளிப்படுத்திய ஜானகி தன்னுடைய காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லையாம். ஆனால் இவர்களுடைய வீட்டில் இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் ஜானகிக்காக ரெக்கார்டிங் போது கூடவே இருப்பாராம். அந்த அளவிற்கு மனைவியின் வெற்றியை பார்த்து ரசித்த வந்த ராம் பிரசாத் 1997 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டாராம். அதுபோல ஜானகி- ராம் பிரசாத் தம்பதிகளுக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறாராம். அவரும் ஹைதராபாத்தில் தான் இருக்கிறாராம். அவருடைய மனைவியின் பெயர் உமா முரளி கிருஷ்ணா. அவர் சென்னையில் உள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடன கலைஞராகவும் இருக்கிறாராம்.

Sampatth Kumar
 

Leave a Reply