• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விளையாட்டுக்களில் இருந்து அரசியலை அகற்ற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து

இலங்கை

அனைத்து வகை விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விசேட காணொளியொன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனைத்து கிரிக்கெட்டிலிருந்து அரசியலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய ஊழல், திறமையற்ற மற்றும் ஒழுங்கற்ற நிர்வாக முறைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

நாட்டிற்கும் விளையாட்டுக்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கிராமத்திலும் நகரத்திலும் திறமையான வீரர்கள் கூட எந்தவித பாகுபாடும் இன்றி உயர் நிலைக்குச் செல்லும் வகையில் கிரிகெட் தெரிவு முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.

குரோனிச கட்டமைப்பில் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் விளையாட்டு வீரர்கள் உயர் நிலைக்கு சென்ற காலங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

உத்தியோகபூர்வ பதவி நிலை தெரிவுகளுக்கான வாக்கெடுப்புகள் பன்முகத்தன்மையுடன் வெளிப்படத்தன்மையுடனும், பொறுப்புடனும் நடத்தப்பட வேண்டும்.

ஊழல் நிறைந்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சரியான பாதையில் செல்ல, பல்வேறு குழுக்களில் நியமிக்கப்படும் நபர்களின் தகுதி மற்றும் விளையாட்டுத் துறை சார் அறிவு குறித்து கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியாது என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த விடயம் அரசியல் இழுபறி நிலைமை இல்லாமல் இடம்பெற வேண்டும்.

அனைத்து விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும்.

சகல தரப்புக்களையும் ஒன்று சேர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply