• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் - ரவி கருணாநாயக்க

இலங்கை

தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் என்பதால் அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் வங்குரோத்து நிலையில் இருந்து வெளியே வரவேண்டி இருக்கின்றது.
வருமானங்களை அதிகரிக்க வேண்டும். ஆகவேதான் வரிகள் அறவிடும் வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக திருப்திகள் தற்போது முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது.

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும். தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் அவைதான் எதிர்காலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

74 வருட பாவத்தை ஒரு வருடத்தில் கழுவி விடலாம் என்று சர்வதேச நாணய நிதியம் நினைக்கின்றது.

இந்த நாட்டு அதிகாரிகள் அவ்வாறான ஒப்பந்தங்களை ஏன் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனாலும் தற்போது புதிதாக சில விடயங்களை சிந்தித்து செயற்பட வேண்டியிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply