• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவுக்கு உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்

போரால் பாதிக்கப்பட்ட காசா நகருக்கு ஸ்டார் லிங்க் நிறுவனம் இணையதள சேவையை வழங்க இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கையில் பாலஸ்தீனத்தின் காசா நகர் தரைமட்டம் ஆக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த போர் நடவடிக்கையால் காசா நகரின் தொலை தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக பேசிய அமெரிக்க பிரதிநிதி அலெக்சாண்டிரியா ஆகேசியோ தனது அறிக்கையில், காசா நகரில் வாழும் 22 லட்சம் பேர் எந்தவொரு தொலை தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனால் பேராபத்தில் உள்ளனர்.

தொலைத்தொடர்பை துண்டிப்பது என்பதை அமெரிக்கா கண்டிக்கிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அலெக்சாண்டிரியா ஆகேசியோ சமூக வலைதள பதிவிற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் நிறுவனம் காசாவுக்கான இணையதள சேவையை வழங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காசாவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்கள் ஸ்டார்லிங்க்-கின் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இந்த இணைய சேவையை பெரும் எனவும் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply