• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனா முன்னாள் பிரதமர் மரணம்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் (வயது 68). 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரதமராக இருந்தார். இந்த நிலையில் கெகியாங், மாரடைப்பால் உயிரிழந்தார். ஷாங்காய் நகரில் வசித்து வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சீனாவின் தலைமைப் பொருளாதார அதிகாரியாக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 1955-ம் ஆண்டு அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். அவர் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தில் ஈடுபட்டார். அவர் 1994-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் மாகாண பதவிகள் மற்றும் அமைச்சகங்களில் பணியாற்றிய பிறகு 2007-ல் கட்சியின் மத்திய குழுவில் சேர்ந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக் குரிய தலைவர்களில் ஒருவராக லீ கெகியாங் இருந்தார்.
 

Leave a Reply