• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் வீடு – அருந்திக பெர்னாண்டோ

இலங்கை

குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் ஐந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவை மீள ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீன அரசாங்கத்துடன் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் இராஜாங்க அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

Leave a Reply