• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் ஒரு நாள் மேயராக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!.. அவர்கள் 

சினிமா

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் என்று அனைவராலும் புகழப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அப்போது இருந்த இந்திய சினிமாவிலேயே அவர் அளவிற்கு நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இல்லை என்று கூறப்பட்டது.

அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் சிவாஜி கணேசன். இந்திய அளவில் பெரிய புகழை பெற்றிருந்தாலும் கூட அப்போது சிவாஜி கணேசனுக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை.

உலகம் முழுக்க புகழ்பெற்ற ஒரு மனிதருக்கு கொடுக்கப்படாத விருது எப்படி மதிப்புள்ளதாக இருக்கும் என்கிற கோபம் இப்போதும் சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு உண்டு. ஆனால் நடிப்பிற்கான அங்கீகாரத்தை விருதுகள் தருவதில்லை. அதை மக்களே தருகின்றனர்.

இந்தியாவில் சிவாஜி கணேசனுக்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் வெளிநாடுகளில் அதிகமாகவே கிடைத்தது 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபரான ஜான் கென்னடி சிவாஜி கணேசனை அழைத்து இருந்தார். விருந்தினராக வந்த சிவாஜி கணேசனுக்கு நல்ல உபசரிப்பு கொடுத்த கென்னடி அவரை புகழ்ந்து பேசியதோடு மட்டும் அல்லாமல் நியூயார்க்கில் உள்ள நயாகரா பகுதிக்கு ஒரு நாள் அவரை மேயராக நியமித்தார்.

அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜான் கென்னடியின் மிக மிக முக்கிய விருந்தாளியாக கலாச்சார பரிமாற்றத்தின் கீழ் அமெரிக்காவிற்கு சிவாஜி சென்றார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரை அடி நீளமுள்ள பெரிய சாவியை நயாக்ரா மேயர் சிவாஜியிடம் கொடுத்து நாளை காலை வரை ஒரு நாள் மேயராக நீங்கள் இருங்கள் என்றார். இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டில் உள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்த இரண்டுபேர்தான். அதில் ஒருவர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, மற்றொருவர் சிவாஜி கணேசன்.

இதை அவருக்கு கொடுக்கும் பெரும் மரியாதை ஆக கென்னடி நினைத்தார். அந்த அளவிற்கு ஹாலிவுட் நடிகர்கள் கூட மதிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியவர் சிவாஜி கணேசன்.

Leave a Reply