• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குறைகளை விட்டுவிடுங்கள். கொண்டாட்டம் நிச்சயம்.

சினிமா

லியோ - நெகடிவ் விமர்சனங்களால் படம் ஓரளவு நன்றாக இருந்தாலே போதும் என்ற மனநிலையுடன் தான் சென்றோம். படம் அட்டகாசமாக இருந்தது. தரமான மேக்கிங், விஜயின் அற்புதமான நடிப்பு, அங்கங்கு ஒளித்து வைத்திருக்கும் திரைக்கதை ஆச்சர்யங்கள் என சுவாரசியமான ஆக்கம். இதற்கு ஏன் இப்படி ஒரு வெறுப்பு பரப்பப்படுகிறது என்பது புரியாத புதிர். 

கழுதைப் புலிகள் கூட்டமாக வாழ்பவை. தன் உடன்பிறந்த ஒரு துணையை இழந்து, கூட்டத்திலிருந்து தனித்துப் பிரிந்து அலைகிறது ஒரு கழுதைப்புலி. அது சென்ற இடமெல்லாம் துரத்தப்படுகிறது. மக்கள் அதன் மீதான அச்சத்தால் அடிக்கிறார்கள். செத்துப்போ என விரட்டுகிறார்கள். எங்கு செல்வது எனத் தெரியாமல் அது ஓடுகிறது. அதன் தேவை ஒன்று தான். பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள ஓரிடம். அது ஒரு குடும்பத்திடம் கிடைக்கிறது. பாசமாக அதைப் பார்த்துக் கொள்கிறார்கள். அது ஒரு மிருகம் என்பது அக்குடும்பம் அறியாது. அதுவும் தான் ஒரு ரத்தவெறி கொண்ட வேட்டையாடி என்பதே மறந்து அவர்களுடன் அவர்களுக்காகவே வாழ்ந்து வருகிறது. அப்போது திடிரென சில மிருகங்கள் அதன் வாழ்வில் குறுக்கிடுகிறது. 

காட்டையும் மிருகங்களையும் நன்கு அறிந்த க.புலி ஒதுங்கிச் செல்ல நினைக்கிறது. ஆனால் வந்த மிருகங்கள் இதை விட்டுவிட்டு அதன் மொத்த உயிராக இருக்கும் அதன் குடும்பத்தைக் குறி வைக்கிறார்கள். தனது பழைய வேட்டைகளை மறந்து வாழும் கழுதைப்புலி இப்போது என்ன செய்யும். ஓட முடியுமா ! மறுபடியும் ஓடி என்ன செய்வது. எங்கு செல்வது. பாதுகாப்பிற்காக எதிர்த்து நிற்கிறது. அதன் பழைய மிருக குணமும் ரத்த வேட்கையும் வெளிவருகிறது. எதிரில் நிற்பவனை எல்லாம் துரத்திக் துரத்திக் கடிக்கிறது. 

அதன் பயம் இப்போது ஒன்று தான், தன் குடும்பத்தை எப்படியாவது காக்க வேண்டும், மேலும் தான் இப்படி ஒரு வெறி கொண்ட மிருகம் என்பது குடும்பத்திற்குத் தெரிந்து விட்டால் ! அவனிடத்திலிருத்து அவர்கள் விலகிவிட்டால், ஆகவே குடும்பத்திடம் மனிதனாகவும், காட்டில் மிருகமாகவும் நைச்சியமாய் நடிக்கிறது. இந்த Manipulative behaviour அதன் குணங்களில் முக்கியமான ஒன்று. இப்படி ஒரு அற்புதமான Metaphor தான் லியோ. தன் குடும்பத்தைத் தொட்டதும் வெறி கொண்ட க.புலியாய் உறுமிக் கிளம்புகிறார் விஜய். சண்டைக் காட்சிகளில் தன்னை மீறி தன் மிருகத்தனம் வெளிப்படும் இடங்கள் அதிமிரட்டல். நிச்சயமாக அவரது திரைவாழ்வின் ஆகச் சிறந்த பாத்திரம் பார்த்திபன். அதை அவ்வளவு கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் விஜய். 

ப்ளாஷ்பேக் காட்சிகள் மற்றும் ஒத்துக்கோ ஒத்துக்கோ வில்லன்கள் தவிர்த்து, லோகேஷின் திரைக்கதை அபாரம். ரெஸ்டாரன்ட் ஷூட்டிங் பின் அழும் பார்த்திபன், அதன் பிறகான அவனது பயம், அக்குடும்பத்திற்கு ஏற்படும் இடர்கள் முடிந்து, ஒரு காபி குடுக்கலாம் என செல்லும் போது வரும் மார்க்கெட் சண்டை மாஸ். அனிருத் நினைத்திருந்தால் ஜெயிலர் டைப் மாஸ் இசை தந்து இதை ஏற்றிவிட்டிருக்கலாம். ஆனால் காட்சி கோருவது என்ன ! முதல்முறையாக அவன் குடும்பம் பார்க்க அவனுள்ளான மிருகம் வெளிவருகிறது. அடித்தே ஆக வேண்டும் ஆனால் அதில் உடைவது அவன் வாழ்க்கை. குடும்பத்து மேல ஏன்டா கைய வைக்கிறீங்க என கண்ணீரும் மனவலியுடன் தான் அடிக்கிறான். இதை இசையில் கடத்துவது கடினம். இதனால் தான் பின்னணி இசை இங்கு சண்டையை உயர்த்திப் பிடிக்கவில்லை. ப்ரில்லியன்ட் அனிருத். தனக்குப் பயமாக இருக்கிறது என குழந்தை மடியில் பார்த்திபன் படுத்துறங்கும் காட்சி ஒரு கவிதை. ஒரு உச்ச ஹீரோவிற்கு, Im scared பாடல் எல்லாம் இந்திய சினிமாவிற்கு புதிது. இதைவிட  கதைக்கு நியாயம் சேர்க்க முடியாது. 

Philomin Raj எடிட்டிங் ஹாலிவுட் தரம். குறிப்பாக ரெஸ்டாரன்ட் சுடும் நொடிகள் மற்றும் சேசிங் காட்சி. தமிழில் இப்படி ஒரு மேக்கிங் வெளியாவது நமக்குப் பெருமை. நடக்கவே முடியாத நிலையிலும் நிறைய வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் இன்று வந்திருந்தார்கள். LCU, History of violence, Factory Drone Sequence, Hyena metaphor எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஏஜன்ட் சுப்ரமணியின் மாஸ் என்ட்ரிக்கு சீட்டில் எகிறிக் குதித்து கைதட்டினார்கள். குடும்பத்தின் மகிழ்ச்சி தான் எங்களைப் போன்ற கழுதைப் புலிகளின் மகிழ்ச்சி. மீண்டும் வருவோம். 

குறைகளை விட்டுவிடுங்கள். கொண்டாட்டம் நிச்சயம். #Leo

Hariharasuthan Thangavelu

Leave a Reply